காளான், பிஞ்சு மக்காச்சோள வறுவல் யுமன் மோகு யுமிசன்
cri
தேவையானவை காளான் 250 கிராம் டின்னில் அடைக்கப்பட்ட இளம் பிஞ்சு மக்காச்சோளம் 200 கிராம். சமையல் எண்ணெய் 75 கிராம் அல்லது 6 தேக்கரண்டி உப்பு 2 கிராம் வெங்காயத் தண்டு 250 கிராம் இஞ்சி 5 கிராம் செய்முறை காளான் தண்டுகளைக் களைந்து விட்டு காளான்களை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். டின்னில் உள்ள மக்காச்சோளத்தைத் தண்ணீரில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். வெங்காயம், இஞ்சி ஆகியவற்றைத் துண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பின் மீது வைத்து சிறிதளவு சமையல் எண்ணெயை ஊற்ற வேண்டும். சற்றே காய்ந்த பிறகு காளான் மக்காச்சோளம், உப்பு, வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை அதில் கொட்ட வேண்டும். சற்று நேரத்துக்கு வறுத்திட்ட பின்பு, வெங்காயத் தண்டுகளைக் கொட்டி கொதிக்க விட வேண்டும். இப்போது சூட்டைக் குறைத்து விட வேண்டும். 10 நிமிடம் வேக விட்டு, சூட்டின் அளவை அதிகரிக்கலாம். ஓரளவு பதமாக வந்தது போல் தோன்றும் போது தட்டுக்கு மாற்றலாம். தட்டின் விளிம்பைச் சுற்றி வட்டமான எலுமிச்சை துண்டுகளைப் பரப்பி தட்டின் நடுவே காளான், மக்காச்சோள கலவையை வைக்கலாம். 4 இடத்தில் பிளம் அல்லது செர்ரி பழங்களை வைத்தால் சதுரமாகத் தோற்றம் தரும்.
|
|