• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2003-12-22 15:07:40    
நீச்சல் வீராங்கனை ரொ சுய் சுவன்

cri

இவ்வாண்டு ஜுலை திங்களில் ஸ்பேயினின் பார்சலோனாவில் 10வது உலக நீச்சல் சாம்பின் பட்டப் போட்டி நடைபெற்றது, சீன வீராங்கனை ரொ சுய் சுவன் மகளிருக்கான 50 மற்றும் 100 மீட்டர் தவளைப் பாணி போட்டியில் தங்க பதக்கத்தைத் தட்டிச்சென்றார். சீன நீச்சலடி அணியில் மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்க்கும் வீராங்கனையரில் ரொ சுய் சுவன் ஒருவராவார். 2001 ஆம் ஆண்டு, ஜப்பானில் நடைபெற்ற 9வது உலக நீச்சல் சாம்பின் பட்டப் போட்டியில் மகளிருக்கான 50 மற்றும் 100 மீட்டர் தவளைப்பாணி பிரிவில், 2 தங்க பதக்கங்களை பெற்றார். அவருடைய சாதனை அடுத்தடுத்து, 2 ஆண்டுகளாக உலகில் முதலிடத்தை வகித்து, வந்தது. இதனால், தவளைப்பாணி நீச்சலுக்கான சீன ராணி என அவர் போற்றப்படுகின்றார். ஜுலை திங்கள் 21ந் நாள் நடைபெற்ற மகளிருக்கான தவளைப்பாணி நீச்சல் கால் இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய வீராங்கனை ஜோன்ஸ் ஒரு நிமிடம் 6.52 வினாடியில், ரொ சுய் சுவன் இன் உலக சாதனையை முறியடித்தார். ரொ சுய் சுவன் இன்னும் சாம்பின் பதக்கத்தை பெறு மடியுமா இல்லையா என்பது பற்றி சுமார் எல்லோருக்கும் ஐயம் உண்டு. ஆனால், மறு நாள், ரொ சுய் சுவன் தங்க பதக்கத்தைத் தட்டிச்சென்றார். 100 மீட்டர் தூரம் நீந்திச் சென்ற பின் ரொ சுய் சுவன், தலையைத் திருப்பி, திரையில் தமது சாதனையை உறுதிப்படுத்திய பின், மகிழ்ச்சியால் நீரைக் கைகளால் தட்டினார். நீச்சல் குளத்திலிருந்து வெளியே வந்த பின், அவர் அழுதார். இந்த தங்க பதக்கத்தை பெறுவது மிக கடினமானது. ஆனால், அடுத்த ஆண்டு ஏதென்சில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மேலும் கடினமாக இருக்கக் கூடும் என்றார் அவர். உலக சாதனையை முறியடித்த ஜோன்ஸ் தனக்கு பெரும் நிர்பந்தம் அளித்ததாக ரொ சுய் சுவன் ஏற்றுக்கொண்டுள்ளார். ரோஸ் மிக சிரந்த நிலையில் இருந்தார். இந்த போட்டியில் நான் மீண்டும் சாம்பியன் பட்டத்தைப் பெற வாய்ப்பு இல்லை என்று அனைவரும் கருதினர். ஆனால், நான் இப்படி நினைக்க வில்லை. சாம்பின் பட்டத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காகவே இங்கு வந்திருக்கின்றேன். என் மீது எனக்கு நம்பிக்கை இருக்க வேண்டும் என்றார் அவர். பயிற்சியாளர் சான் யா துனின் பார்வையில், ரொ சுய் சுவன் உறுதியான குணநலனைக் கொண்ட வீராங்கனையாவார். கடந்த 6 திங்களில், ரொ சுய் சுவன் மிக கடின பயிற்சியில் ஈடுபட்டார். சிறந்த சாதனை பெற்றார். 2004 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கத்தை வெல்ல வேண்டும். இதில்எங்களுக்கு நம்பிக்கை உண்டு. பயிற்சியில் அவருடைய குறையை சமாளிக்கும் வகையில் கடைசி 50 மீட்டர் தூரத்திற்கான பயிற்சியை அதிகரிக்கவுள்ளோம். இது அடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும் என்றார் அவர். 19 வயதாகும் இவ்வீராங்கனை மருத்துவராக விளங்க வேண்டும் என்று விரும்கின்றார். எதிர்காலத்தில், தனியார் உளவியல் மருத்துவமனையைத் துவக்கிய வேண்டும் என்பது அவருடைய விருப்பமாகும். 1990ஆம் ஆண்டுகளில், சீனாவின் மகளிர் நீச்சல் அணி சிறந்த சாதனை பெற்றிருந்தது. சீன நீச்சல் துறையின் புதிய தலைமுறையின் பிரதிநிதியாக ரொ சுய் சுவன் திகழ்கின்றார். 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், சீன மகளிர் நீச்சல் அணியின் எதிர்காலம் பற்றி குறிப்பிடுகையில், சீனாவில் நடைபெறவுள்ள 2008ஆம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக, முழுமையாக தயாரிக்கவுள்ளோம். முன்பு போல , வலுவான ஆற்றல் பெற்றிட முடயாது என்றாலும், இயன்ற அளவில், இந்த போட்டியில் சிறந்த சாதனை பெற்றிட முயற்சி செய்வோம் என்று ரொ சுய் சுவன் கூறினார்.