• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2003-12-24 15:26:36    
வேலை இழந்த மகளிர்

cri
வேலை இழந்தோருக்கு மறு வேலை வாய்ப்பு வழங்குவது சீன அரசின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். வேலை இழந்த மகளிருக்கு மறு வேலை வாய்ப்பு வழங்குவது என்பது சீனாவின் பல்வேறு நிலை மகளிர் சங்கங்களின் பணிகளில் மிக முக்கியமானதாகும். குவான் சி சுவான் இன தன்னாட்சி பிரதேசம் சீனாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. மேற்கு பகுதியை வளர்ச்சியுறச் செய்வதன் நெடுநோக்கு திட்டத்தில் வகுக்கப்பட்ட 12 மாநிலங்கள் மற்றும் தன்னாட்சி பிரதேசங்களில் இது ஒன்றாகும். இதன் மொத்த நிலப்பரப்பு 2 இலட்சத்து 36 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். மக்கள் தொகை 8 கோடியே 78 இலட்த்து 80 ஆயிரமாகும். இதில் 48.5 விழுக்காட்டினர் மகளிராவர். நகரில் மகளிருக்கான மறு வேலை வாய்ப்புப் பணியில் குவான் சி தன்னாட்சி பிரதேசத்து மகளிர் சங்கம் மிகவும் கவனம் செலுத்துகின்றது. சீர்திருத்தம் ஆழமாகிவருவதுடனும் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் நிர்வாக அமைப்பு முறையின் சரிபடுத்தலுடனும், வேலையிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 1999ஆம் ஆண்டில், எமது தன்னட்சி பிரதேசத்தில் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை இழந்தனர். அவர்களில் 50 விழுக்காட்டுக்கு அதிகமானோர் மகளிராவர். வேலை இழந்த மகளிர் மிகவும் கவனிக்கப்பட்டு உதவி செய்யபடத்தக்க ஒரு கூட்டமாகும் என்று இச்சங்கத்தின் தலைவர் ஜியான் பே லன் அம்மையார் கூறினார். சுய நம்பிக்கையை இழக்கக் கூடாது என்று வேலை வாய்ப்பு இழந்த மகளிருக்கு அறிவுரை கூறுகின்றோம். அவர்களில், புதிய வேலை வாய்ப்பைத் தேடும் பணித்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றோம். குடியிருப்புப் பிரதேசத்தில், குறிப்பாக குடும்ப சேவை துறையில் தத்தம் வேலையைத் தேடிப்பிடிக்குமாறு அவர்களுக்கு ஊக்கம் அளிக்கின்றோம் என்றார் குவான் சி தன்னாட்சி பிரதேசத்தின் மகளிர் சங்கத்தின் வளர்ச்சி துறை தலைவர் 高宁 அம்மையார். மறு வேலை வாய்ப்பு பணியை மேலும் செவ்வனே செய்யும் பொருட்டு, பல்வேறு நிலை மகளிர் சங்கங்கள் இத்தகைய மகளிருக்கு தொழில் பயிற்சி வழங்கப்படுகின்றது. பூர்வாங்க புள்ளிவிபரங்களின் படி, முழு பிரதேசத்தில் மொத்தம் 51 ஆயிரத்து 69 மகளிர் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். வேலை இழந்த பெரும் வாரியான மகளிர் இத்தகைய பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற்று, பின புதிய வேலை தலத்துக்குச் சென்றுள்ளனர். நிதி பற்றாக்குறை என்பது, வேலை இழந்த மகளிர் மீண்டும் வேலை வாய்ப்பினைப் பெறுவது மிகவும் சிரமமாகின்றது. இப்பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, கிராமப்புறத்தில் வெற்றிகரமாகச் செயலாக்கப்பட்டு வரும் சிறு நம்பிக்கை கடன் வழங்கும் முறையை குவான் சி தின்னாட்சி பிரதேசத்தின் மகளிர் சங்கம் நகரங்களில் மேற்கொள்கின்றது. முதலில், அரசு சார் தொழில் நிறுவனங்களும் வேலை வாய்ப்பினை இழந்த மகளிரும் கூடுதலாக இருக்கும் தொழில் துறை நகரான லியு சௌவில் இப்பணியை மகளிர் சங்கம் சோதனை முறையில் மேற்கண்டது. 2000ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் வழங்கிய முதலாவது தொகுதி கடன் தொகையில், வேலை வாய்ப்பை இழந்த 36 மகளிர் சிறு தொகை கடனைப் பெற்றனர். குழந்தை காப்பகம், பாளர் பள்ளி, மாணவருக்கான உணவு கூடம், வீட்டைத் சுப்புரவு செய்யும் பணி முதலிய சேவை நிகழ்ச்சிகளை அவர்கள் துவக்கியுள்ளனர். நகரையும் மக்களையும் வளமடைய செய்யும் திட்டப்பணியாகவும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் திட்டப்பணியாகவும் லியு சௌ நகராட்சி இப்பணியை மேற்கொண்டு, சுமார் 21 இலட்சத்து 50 ஆயிரம் யுவானை நம்பிக்கை கடனாக வழங்கியுள்ளது. இப்பணி 柳州 நகரில் வெற்றி பெற்ற பின், லியு சௌ நகரின் அனுப்பவத்தை தன்னாட்சி பிரதேசத்து மகளிர் சங்கம் முழு பிரதேசத்திலும் பரவல் செய்தது. 1999ஆம் ஆண்டு முதல், கிராமப்புறத்தில் மகளிருக்கு சிறு தொகை நம்பிக்கை கடன் வழங்குவதில் வெற்றி பெற்ற அனுப்பவத்தை பிரதேசத்து மகளிர் சங்கம். லியு சௌ, நான்னின், குய் லின் முதலிய 11 நகரங்களில் இத்தகைய கடன் வழங்குதல் மூலம், மகளிருக்கான மறு வாய்ப்பினை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றது. 2003ஆம் ஆண்டு மார்சு வரை, 3665 மகளிர் நிதியுதவியைக் கொண்டு, மறு வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். 20 ஆயிரத்துக்கு அதிகமானோர் இதிலிருந்து பயன் பெற்றுள்ளனர் என்றார் இச்சங்கத்தின் தலைவர் ஜியான் பே லன் அம்மையார். சிறு தொகை நம்பிக்கை கடனின் பயன் பற்றி குறிப்பிடுகையில், ஜியான் பே லன் அம்மையார் எடுத்து கூறினார். வேலை வாய்ப்பை இழந்த மகளிர் மறு வேலை வாய்ப்பினை கிடைப்பதன் அவசர தேவையை இந்தக் கடன் நிறைவு செய்யும் அதேவேளையில், அவர்களின் வேலையைத் தேடும் கருத்தையும் மாற்றி, குடியிருப்பு பிரதேசமத்து சேவை வளர்ச்சியையும் முன்னேற்றுவித்துள்ளது. அத்துடன், அரசாங்கத்துக்கும் பரந்துபட்ட மகளிருக்கும் இடையிலான உறவையும் இது நெருக்கமாக்கியுள்ளது. சிறு தொகைநம்பிக்கை கடன் வழங்குவதன் மூலம் மறு வாய்ப்பினைப் பெற வேலை இழந்த மகளிருக்கு உதவி அளிப்பது என்பது, பல்வேறு நிலை அரசுகளின் தொடர்புடைய வாரியங்களின் ஏற்றுக்கொள்ளுதலையும் பல்வேறு சமூக வட்டாரங்களின் பாராட்டையும் பெற்றுள்ளது என்றார் அவர்.