• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2003-12-24 15:28:01    
பீகிங்க இசை நாடகம் லி வி கான்

cri
பீகிங்க இசை நாடகம் என்பது, சீனப் பாரம்பரிய தேசிய இசை நாடகங்களில் ஒன்றாகும். சீனாவின் தேசிய இசை நாடகம் எனப் புகழ் பெற்றது. இந்நாடகத்தில், பல்வேறு பாத்திரங்கள் இருக்கின்றன. லி வி கான், கதாநாயகிப் பாத்திரத்தை நடிப்பவர். அவர் வெவ்வேறு பாணிகளின் சிறப்பை ஆராய்ந்து, உள்ளூர் இசை நாடகங்கள் மற்றும் பாடலைப் பாடும் வடிவங்களை கற்றுக் கொண்டு, தனிச்சிறப்பு வாய்ந்த பாடும் முறையை உருவாக்கினார். லி வி கான் பீகிங் இசை நாடகத்தைப் படிப்பதில், அவருடைய குடும்பம் செய்வாக்கு வகித்துள்ளது. லி வி கானின் தாத்தா, பழைய சு குவா இசை நாடக பள்ளியில் பணி புரிந்தார். அவரது தந்தை, அடிக்கடி இத்தகைய நாடகத்தைப் பார்த்து வந்தார். அவருடைய பெற்றோருக்கு, பீகிங் இசை நாடகம் மிகவும் பிடித்திருந்தது. ஆகையால், 11 வயதான போது, சீன இசை நாடக பள்ளிக்கு அவரை அனுப்பினார். பள்ளியில் படித்த 8 ஆண்டு காலத்தில், லி வி கான் மிக சிறந்த மாணவி எனப் பெயர் எடுத்தார். வெள்ளிமணிக் குரலாள் என்று பாராட்டப்பெற்றார். சீன இசை நாடகத்தின் பாரம்பரியத்தின் படி. புதிய மாணவர் இசை நாடகத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமானால், குறிப்பிட்ட இசை நாடகப் பாணியில் நடித்திட வேண்டும். ஆனால், இதற்குப்பின் வேறு ஆசிரியர்களிடமிருந்து பாடத்தை கற்ற்க்கொள்ளக் கூடாது. பீகிங் இசை நாடகத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்று லி வி கான் கருதியதால், அவர் எந்தப் பாணியிலும் சேரவில்லை. பள்ளியில் சேர்ந்த பின்னரே, இந்நாடகத்திலான நெருக்கடியை உணர்ந்தேன்.

1960ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில், இந்நாடகத்தைக் காண வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவில்லை. ஆகவே, அதிகமான பார்வையாளர்கலை ஈர்க்க வேண்டும் என்று எனது மனதில் தோன்றியது. இப்பிரச்சினையைத் தீர்ப்பது பற்றி அடிக்கடி கருதினேன். ஆகையால், படிப்பு முடிந்த பிறகு, எந்த நாடக பாணியிலும் கலந்து கொள்ளவில்லை. காரணம், புதுப்பிக்கும் ஆர்வம் கொண்டுள்ளேன் என்றார் அவர். 1976ஆம் ஆண்டு, பண்பாட்டு புரட்சி நிறைவடைந்த பின், சீனாவில் பல்வேறு பண்பாட்டுக் கலைகள் மறுமலர்ச்சியடையத் துவங்கின. நவீன நாடகத்தை வளர்ப்பது, வரலாற்று நாடகத்தைப் புதுப்பிப்பது, பாரம்பரிய நாடகத்தை மீட்பது ஆகியவற்றுக்கு சீன இசை நாடக துறை ஊக்கம் அளித்தது. லி வி கானின் கலை ஆர்வம், புத்துயிர் பெற்றது. உயிர்த்துடிப்புடன் லி வி கான் பல நாடகங்களை அரங்கேற்றினார். பூக்களை விரும்பும் வண்ணத்துப்பூச்சி என்றஉ நவீன பீகிங் இசை நாடகத்தில், காலஞ்சென்ற தலைவர் மா சே துங்கின் துணைவியார் யாங் காய் ஹூய் அம்மையாராக வேடமேற்று அவர் நடித்தார். சில பாரம்பரிய இசை நாடகங்களையும் லி வி கான் திருத்தி எழுதினார். அரங்கேற்றுவதற்கு முன், ஒவ்வொரு நாடகத்தையும் லி வி கான் மீண்டும் கவனமாக ஆராய்ந்தார். ஒவ்வொரு வாக்கியமும், ஒவ்வொரு கண் அசைவும், ஒவ்வொரு இசைப் பகுதியும் அவரது ஆய்வுக்கு உள்ளாயின. அவரால் திருத்தி எழுதப்பட்ட பாரம்பரிய இசை நாடகங்கள், முன்பை விட மேலும் சிறந்து விளங்கின. மேலும் அதிக மக்களை ஈர்த்துள்ளன. பாரம்பரியத்தின் மீது, உணர்வார்ந்த முறையில் மதிப்பு கொண்டு, கையாண்டேன். பீகிங் இசை நாடகத்தை மேலும் கண்டுகளிக்கத்தக்கதாக மாற்றிட முயற்சி செய்கின்றேன். சிறந்த பகுதிகளைத் தொடர்ந்து கைக்கொண்டதுன். இவற்றை கூடிய அளவில் முழுமையாக வெளிப்படுத்தி, குறைபாடுகளை நீக்க பாடுபட்டு வருகின்றேன். தற்போது, நடிகர்களும் நிபுணர்களும் பார்வையாளர்களும் என்னை விரும்புகின்றனர் என்றார் அவர். சிறு வயது முதல், பீகிங் இசை நாடகத்தின் நடிப்புக்கலையை லி வி கான் கற்றுக் கொள்ளத் துவங்கினார்.ஆனால், இதர கலை முறைகளிலும் அவர் கவனம் செலுத்துகின்றார். திரைப்படத்தை அவர் மிகவும் விரும்புகின்றார். பாத்திரங்களின் நடிப்பை ஆராய விரும்புகின்றார். பீகிங் இசை நாடகத்தை அரங்கேற்றுவதில், நவீன நடிப்பு உத்தியைப் பயன்படுத்துகின்றார். இதனால், நவீன கலையாழகு வாய்ந்த லி வி கானின் நடிப்பை பார்வையாளர் பெரிதும் வரவேற்கின்றனர். அதேவேளையில், நிபுணர்களின் பாராட்டினையும் பெற்றுள்ளது. 1983ஆம் ஆண்டு, சீன இசை நாடக துறையின் மிக உயர்ந்த முதலாவது மேய் குவா பரிசை அவர் பெற்றார். திரைப்படத்துறையில் சேருமாறு, பலர் லி வி கானுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், பீகிங்க இசை நாடகத்தை அவர் துறக்க விரும்பவில்லை. விரும்பிய படி, பாடுபட விரும்புகின்றேன். ஓர் இலக்கை நனவாக்கும் வகையில், இயன்றளவில் பாடுபட விரும்புகின்றேன். இந்த எழுச்சி இல்லை என்றால், இலக்கை நனவாக்க முடியாது. முயற்சி மேற்கொண்டு, இலட்சியத்தில் ஊன்றி நின்றால், சாதனை படைக்கலாம் என்றார். அவர். லி வி கானின் கணவர் பீகிங் இசை நாடகத்தின் புகழ்பெற்ற நடிகராவார். வாழ்க்கையில் அவர்கள், நல்ல தம்பதி தான். பணியில், ஒருவருக்கு ஒருவர் உதவி புரிகின்றனர். பீகிங் இசை நாடகத் துறையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். தொலைக்காட்சித் தொடராக, பீகிங் இசை நாடகத்தை கதாநாயகியாக நடித்து ஒளிப்பரப்புவது அவருடைய விருப்பமாகும்.