• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2003-12-24 15:29:22    
சீனாவின் மேற்குப் பகுதியின் பண்பாடு

cri
சீனாவின் 34 மாநில நிலை நிர்வாகப் பிரதேசங்களில் 12 மேற்குப் பகுதியில் இடம் பெறுகின்றன. அதன் நிலப்பரப்பு சீனாவின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் 2 பகுதியாகும். மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள், மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழுள்ள மாநகரங்கள் ஆகியவை அதில் உள்ளன. பரந்துபட்ட நிலப்பரப்பும் , சில ஆயிரம் ஆண்டுக்கால நாகரிக வளர்ச்சி வரலாறும் உண்டு. வரலாற்றுச் சிதிலங்கள் பலவற்றைக் காணலாம். தற்போது அங்குள்ள 10 இயற்கைக் காட்சித் தலங்கள் யூனெஸ்கோவின் உலக மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. வாஹுன்பின் என்பவர் சுற்றுலாத் துறையில் மூத்த அறிவாளராவார். பல இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் சீனாவின் மேற்குப் பிரதேசத்தின் சுற்றுலா மூலவளத்தின் தினிச்சிறப்பியல்பு பற்றிக் கூறுகிறார். இயல்பானது, அதன் முதலாவது தனிச்சிறப்பியல்பாகும். மேற்குப் பிரதேசத்தின் சுற்றுலா மூல வளம் செழுமையானது. மலைத் தொடர்கள், ஆறுகள், குகைகள், புல்வெளி, காடுகள், கோயில்கள், பண்டை வரலாற்றுத் தலங்கள், சிறுபான்மைத் தேசிய இனப் பழக்கவழக்கங்கள் ஆகியவை மூலவளங்களில் இடம் பெறக் காணலாம். அன்று முதல் இன்றுவரை அவை பாதுகாக்கப்பட்டுள்ளன. பிரதேசத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு இடத்துக்குச் சொந்த தனிச்சிறப்பியல்பு உண்டு. ஒன்றுக்கு மாற்றாக மற்றது இருக்க முடியாது என்பது அதன் 2வது தனிச்சிறப்பியல்பாகும். பல்வகை அம்சங்கள் என்பது அதன் 3வது தனிச்சிறப்பியல்பாகும். தங்கள் எதிர்ப்பார்க்கும் சுற்றுலா மூலவளமும், காட்சித்தலங்களும் அங்கே கண்டறியப்படலாம். அங்கு உயிரின வாழ்க்கைச் சூழல் சீராக நிலவுகின்றது. பல்வகை அற்புதமான இயற்கைக் காட்சிகளும் மிகச் செழுமையான தேசிய இனப் பழக்கவழக்கங்களும் உள்ளன. சீனாவின் மேற்குப் பிரதேசத்தைப் பொறுத்தவரை மறக்கவே இயலாத இடம், சீனாவின் முதலாவது பெரிய ஆறான யாங்ஞ்சி ஆற்றின் தோற்றுவாய் தான். பீடபூமியில் வாழ்கின்ற நங்கையர் தனிப்பட்ட பாணியில் பாடும் பாடல்களைச் செவிமடுக்க லாம். அங்கு அழகான சிங்காய் ஏரி உண்டு. ஏரியில் பறவைத் தீவு உண்டு. சில புகழ்பெற்ற கோயில்களும் அங்கு உள்ளன. புத்தமத திருமறையின் ஒலி அங்கிருந்து ஒலிக்கின்றது. அங்கே வாழும் மக்களுக்கிடையில் மிகவும் வரவேற்கப்பட்ட ஹு ர் எனும் பாடலைக் கேட்கும் வாய்ப்பு உண்டு. சிங்காய் மாநிலம் பற்றி அறிமுகப்படுத்தும் அதேவேளையில் உள்மங்கோலியா பற்றியும் கூறலாம். புல்வெளியும் பாலைவனமும் உள்மங்கோலியாவின் மூலவளமாகும். இரவில் புல்வெளியின் மேல் படுத்த வண்ணம் மின்னுகின்ற விண்மீன்களுடன் உரையாடலாம். ஆகஸ்ட் திங்களில் உள்மங்கோலியாவுக்கு வந்தால் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாமு என்னும் மாபெரும் விழாவில் கலந்து கொள்ளலாம். அப்போது குதிரைப் பால் மதுவைக் குடிக்கலாம். ஆட்டிறைச்சியை உண்ணலாம். மங்கையர் ஹாடாவை உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிப், பாடல் பாடுவர். நீங்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கலாம் . நாசி இனமக்கள் சீனாவின் தென்மேற்கு பிரதேசத்திலுள்ள யூனான் மாநிலத்தின் லீச்சியான் நாசி தன்னாட்சி மாவட்டத்தில் வாழ்கின்றனர். பண்டை இசை அங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலா சின்னமாகியுள்ளது. லீச்சியான் இசை போல, சீனாவின் மேற்கு பிரதேசத்தில் போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு வசதிகள் சீரடைந்துள்ள நிலையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் சுற்றுலா மூலவளம் மேன்மேலும் அதிகமான மக்களுக்குத் திறந்துவைக்கப்படும். சான்சி மாநிலத்திலான சின்ஸகுவான் எனும் பேரரசரின் கல்லறையிலுள்ள கடுமட்பாண்ட போர்வீரர்களின் உருவச் சிலைகளின் கண்காட்சி, கன்சூ மாநிலத்தில் அமைந்துள்ள மொகோகு குகை, திபெத்தின் போதாலா அரண்மனை சுச்சான் மாநிலத்தில் உள்ள சியு ச்சை கோ போன்ற அழகான கிராமங்கள், மக்களின் வருகையை எதிர்பார்க்கின்றன. சீனாவின் மேற்குப் பிரதேசத்தின் பல்வேறு இடங்கள் உள்ளூர் நிலைமைக்கேற்ப சுற்றுலாத் துறைகளை வளர்ச்சியுறச் செய்துள்ளன. எடுத்துக்காட்டாக, உயிரின வாழ்க்கை சுற்றுலாத் துறை, பண்பாட்டு சுற்றுலா, துணிச்சலான சுற்றுப் பயணம், பாலைவன சுற்றுலா, பழக்கவழக்கம் நிறைந்த சுற்றுலா மதப் பண்பாட்டுச் சுற்றுலா, விடுமுறை சுற்றுலா ,விளையாட்டுச் சுற்றுலா, அறிவியல் ஆராய்ச்சி சுற்றுலா போன்றவை புதிய சுற்றுலா நிகழ்ச்சிகளாகும். சுற்றுலா மூல வளத்தை முயற்சியுடன் அதிகரிக்கும் அதேவேளையில் , உள்ளூர் உயிரின வாழ்க்கை சூழநிலைக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்படக் கூடிய பாதிப்பைக் குறைக்க அல்லது தவிர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.