|
 |
(GMT+08:00)
2003-12-24 15:32:48
|
 |
திபெத்தில் உள்ள எழில் மிக்க இயற்கை காட்சி
cri
திபெத்தில் உள்ள எழில் மிக்க இயற்கை காட்சியானது, இங்கு முதன்முதலாகச் சுற்றுலா மேற்கொள்வோரின் கண்களுக்கு விருந்தாகின்றது. இங்கு, வானம் தெள்ளத்தெளிவாக உள்ளது. கைக்கு எட்டும் தூரத்தில் மேகத்தைப் பார்க்கும் போது, அதனுடன் உரையாட, உறவாட வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். உறைபனி படர்ந்த மலைகள், அமைதியாகவும் கம்பீரமாகவும் காணப்படுகின்றன. அவற்றின் அடிவாரத்திலுள்ள ஏரிகள், உங்களைத் தேவலோகத்திற்கு அழைத்துச்செல்லும். ஓ, எவ்வளவு அழகானது, திபெத். திபெத்தில் ஏகப்பெரும்பாலோர் புத்த மதத்தின் மீது நம்பிக்கை கொள்கின்றனர். கி.பி. 7வது நூற்றாண்டில் சீனாவின் இதர பிரதேசங்களிலிருந்தும் நேபாளம் இந்தியா ஆகியவற்றிலிருந்தும் திபெத்துக்குப் பரவிய புத்த மதம் உள்ளூர் பொன் மதத்துடன் ஒன்றிணைந்த பின், புத்த மதத்தின் முக்கியமானதொரு கிளையான திபெத் புத்தமதமாக உருவாயிற்று. நாட்கள் செல்லச் செல்ல, அது உள்ளூர் மக்களின் மிக முக்கியமான மத நம்பிக்கையாக மாறி விட்டது. திபெத் பிரதேசத்தில் வாழும் மக்களும் இங்கு சுற்றுலா வரும் பயணிகளும் அடிக்கடி பிரார்த்தனை இசையைக் கேட்க முடியும். 60 வயதைத் தாண்டிய சாங் சியாவ் பிங் என்பவர், பெய்ஜிங்கில் செய்திமுகவராகப் பணியாற்றினார். அவர் 17 முறை திபெத் சென்றிருக்கிறார். அங்கு 6 ஆண்டுகள் பணி புரிந்தார். திபெத்தின் பல இடங்களுக்கு வருகை தந்த இவர், ஒரு திபெத்தியப் பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். நான் பத்து முறை திபெத் சென்றிருக்கிறேன். இருந்தும், அது எப்போதும் உயிர்த்துடிப்புடன் கூடிய ஒளிமயமான பல வண்ண உலகமாக என் கண்ணுக்குத் தென்படுகிறது. படித்து முடிக்காத கலைக்களஞ்சியம் போல் திபெத் உள்ளது. வானம், பூமி, இயற்கை இவற்றை திபெத் இன மக்கள் மதித்து, பயபக்தியுடன் இருப்பது, என்னை நெகிழச்செய்துள்ளது. அவர்கள் இயற்கையின் பிறவி, பேரன் பேத்திகள் போல் இருக்கின்றனர். இதனால் இவர்கள் நன்றியுடையவர்களாக விளங்குகின்றனர். மன்னர் கசார் சுய சரிதை எனும் காவியம் உலகில் மிக நீளமான காவியமாகும். கசார் துவக்கத்தில் ஒரு தேவர். பிசாசுகளை வென்றடக்க மக்களுக்கு உதவும் வலையில், அவர் மனித உலகிற்கு வந்தார். அவர் போரிடும் ஆற்றல் மிக்கவர். அளவற்ற தெய்வீக ஆற்றல் உடையவர். நீரும் மீனும் போல் மக்களுடன் பழகுவார். தம் புனிதப் பணியை நிறைவேற்றிய பின் தேவலோகத்துக்குத் திரும்பினார். சீன அரசு, கடந்த பல பத்து ஆண்டுகளில் அதிகமான அளவு மனித மற்றும் நிதி ஆற்றலைச் செலவிட்டு, இக்காவியத்தை எழுத்து வடிவ மற்றும் ஒளி நாடா வடிவமாக்கி, பாதுகாத்துள்ளது. இக்காவியமானது, திபெத் இனத்தின் கலைக்களஞ்சியமாகும். இதில் காணப்படும் பெரும்பாலான பாடல்கள், திபெத் இன மக்கள் விரும்பிக் கேட்கும் நாட்டுப்புறப்பாடல்வடிவில் எழுதப்பட்டவை. பண்டைக்கால திபெத் இனமக்களின் மதச் சடங்குகள், போர் முறைகள், சமூகப் பழக்க வழக்கங்கள், திருமண மற்றும் வாழ்க்கை முறைகள் ஆகியவை இக்காவியத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. திபெத் மக்கள் மட்டுமல்ல, வெளிநாட்டவர்களும் இதை விரும்பிப் படிக்கின்றனர். ரஷிய, ஆங்கில, பிரெஞ்சு, இந்தி மற்றும் மங்கோலிய மொழிகள் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பா சாங் லோ பூ, திபெத் சமூக அறிவியல் கழகத்தைச் சேர்ந்த தேசிய இன ஆய்வகத்தின் தலைவர் ஆவார். இவர் திபெத் பண்பாடு பற்றிய ஆராய்ச்சியில் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றார். திபெத் நாடகத்தை அவர் விரும்பிக் கண்டுகளிக்கிறார். திபெத் இனப் பண்பாடு, நீண்டகால வரலாறுடையது. சீன நாட்டின் பண்பாட்டுக் கலைக்களஞ்சியத்தில் அது ஒளிவீசும் முத்து. உள்ளூர் பொன் மதப்பண்பாடு, பின்னர் இங்கு பரவிய புத்த மதப்பண்பாடு ஆகியவை தவிர, திபெத் இனத்தின் கிராமப்புறப் பண்பாடும் வளம்மிக்கவை. திபெத் இனத்தின் நாடகம், கிராமப்புறப்பாடல், ஓவியம் இவையனைத்தும் தன்னிகரற்றவை. திபெத் இனப் பண்பாட்டுக்கும் இதர தேசிய இனப் பண்பாட்டுக்குமிடையிலான பரிமாற்றம் மிகப் பரந்தளவில் நடைபெறுகின்றது. திபெத்தில் காணப்படும் பல சுவர் ஓவியங்களிலிருந்து இதைக் கண்டறியவாம் என்று பா சாங் லோ பூ கூறினார்.
|
|
|