• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2003-12-24 16:45:13    
மேற்குப் பகுதியின் இஸ்லாமியப் பண்பாடு

cri
சீனாவின் பண்டைக் கால நகரான சீஆனிலிருந்து புறப்பட்டு, வட மேற்குத் திசையை நோக்கிச் சென்றால், வெள்ளைத் தொப்பி அணிந்த ஆண்கள் அதிகமாகத் தென்படுவர். முஸ்லிம் என எழுதப்பட்ட உணவகங்களும் காணப்படுகின்றன. சீன முஸ்லிம்கள் குழுமிவாழும் பிரதேசத்தில் நீங்கள் நுழைந்துள்ளதை இது குறிக்கின்றது. வெள்ளைத் தொப்பி அணிந்தவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். இஸ்லாமிய மத நம்பிக்கையுடைய பத்து தேசிய இனங்களில் குய் இனமும் ஒன்றாகும். இந்த பத்து இனங்கள், முக்கியமாக வட மேற்குப் பகுதியில் வாழ்ந்துவருகின்றன. குய் இன மக்கள் முக்கியமாக, நிங்சியா குய் இனத் தன்னாட்சிப் பிரதேசம், ச்சிங்காய் மாநிலம், கான்சு மாநிலம் ஆகியவற்றில் வாழ்கின்றனர். உய்கூர் இன மக்கள் முக்கியமாக சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் குழுமி வாழ்கின்றனர். இஸ்லாமிய மத நம்பிக்கையுடைய இனங்களில், கஜக்ஸ்தான் இனம், கிர்கிஸ் இனம், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் முதலிய இனங்களும் இடம்பெறுகின்றன. இந்தப் பத்து இனங்களின் மத நம்பிக்கை ஒன்றே ஆயினும், வேறுபட்ட பண்பாட்டுப் பாரம்பரியத்தையும், பழக்கவழக்கங்களையும் அவை கொண்டுள்ளன. சீன சமூக அறிவியல் கழகத்தின் தேசிய இன இயல் ஆய்வுக் கூடத்தைச் சேர்ந்த ஆய்வாளர் குவாங் திங் குய், இஸ்லாமியப் பண்பாடு பற்றிய ஆய்வில் ஈடுபட்டுவருகின்றார். இஸ்லாமியப் பண்பாட்டை அறிந்துகொள்ள நீங்கள் சீனா வர விரும்பினால், நிங்சியா மற்றும் கான்சுவிலுள்ள முஸ்லிம்களின் வாழ்க்கை மற்றும் பண்பாட்டைக் காண வேண்டும., அதன் பின்னர், சிங்கியாங்கிற்குச் செல்லலாம் என்று குவாங் திங்குய் கூறினார். நிங்சியா குய் இனத் தன்னாட்சிப் பிதேசத்தின் தலைநகரான இந்ச்சுவான் நகரில், உள்ள நந்குவான் மசூதியானது, புகழ்பெற்ற மசூதியாகும். 1980ஆம் ஆண்டுகளில் அரபு பாணியில் கட்டப்பட்ட பெரும் மண்டபத்தில் காணப்படும் பச்சை நிறமான, இந்த மசூதியில் இருபாலாருக்கான குளியலறைகள், வழிபாட்டு அறை, இமாம் ஓய்வு எடுக்கும் அறை, வரவேற்பு அறை ஆகியவை காணப்படுகின்றன. வழிபாடு இல்லாத நாட்களில், பயணிகள் இந்த மசூதியைப் பார்வையிடலாம். சீன முஸ்லிம்கள் குழுமிவாழும் பிரதேசத்திலுள்ள இதர மசூதிகளைப் போல, இந்த மசூதிக்கும் பல பயன்பாடுகள் உண்டு. முஸ்லீம்கள் மத நடவடிக்கைகளில் ஈடுபடும் மைய இடமாக விளங்கும் அதேவேளையில் இதர சமூக நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ளும் இடமாகவும் அது விளங்குகின்றது. அரபு நாடுகளின் மசூதியுடன் ஒப்பிடும் போது, பலதரப்பட்ட சமூகப் பயன்பாடு என்பது, சீன மசூதியின் தனிச்சிறப்பியல்பாகும். இது சீன இஸ்லாமிய பண்பாட்டின் தனிச்சிறப்பயல்பாகும். சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்துக்கு வந்தால், இனிய பாடல்களை நீங்கள் கேட்கலாம். சீனாவின் 56 தேசிய இனங்களில், ஆடல் மற்றும் பாடலில் உய்கூர் இனம் தலைசிறந்தது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிங்கியாங்கிலுள்ள முஸ்லீம்களுக்கும் மசூதி இன்றியமையாதது. இப்பிரதேசத்தின் தென் பகுதியில் காஷ் நகரில் அமைந்துள்ள ஈத்கா மசூதி, சிங்கியாங்கில் மிகப் பெரியது, மிகவும் புகழ் பெற்றது. 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. சீனாவில் மிகப் பெரியது. மத்திய ஆசியாவிலும் தென்னாசியாவிலும் மிகவும் புகழ்பெற்றது. முன்னாள் ஈரான் அரசு தலைவர் அயத்துல்ல அலி கமேனியும் துருக்கி அரசு தலைவர் அமெட் செஸெரும் இங்கு வழிபாடு செய்தனர். இந்த மசூதியின் தெற்கு வடக்கு பக்கங்களில், திருமறையை ஓதுவதற்கென தலா 36 அறைகள் இருக்கின்றன. இமாம்கள் அவற்றில் திருமறை விளக்கம் நிகழ்த்துவர். சாதாரண நாட்களில் பொதுவாக ஈராயிரம் அல்லது மூவாயிரம் பேர் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். வெள்ளிக்கிழமையன்று, ஆறாயிரம் முதல் ஏழாயிரம் பேர் இங்கு வழிபாடு செய்வர். சீனாவின் மேற்குப்பகுதியில் சீனத் தனிச்சிறப்பியல்புடைய இஸ்லாமிய பண்பாட்டை உணரலாம். அழகிய இயற்கை காட்சிகளையும் அரிய பண்டை நாகரிக சிதிலங்களையும் காண்டுகளிக்கலாம். இங்கு, உலகில் இரண்டாம் இடம் வகிக்கும் தக்லாமாகான் பாலைவனம், பரந்து கிடக்கும் புல்வெளி, மலைகள் ஏரிகள், உலக புகழ்பெற்ற லூலான் சிதிலங்கள் ஆகியவையும் உண்டு. வாய்ப்பு கிடைத்தால், வருகை தந்து, சீன மேற்குப் பகுதியின் பண்பாட்டைக் கண்கூடாக அனுபவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.