|
 |
(GMT+08:00)
2003-12-24 16:45:13
|
 |
சீன தேசிய இனங்களின் பழக்க வழக்கங்கள்
cri
சீனாவின் 56 தேசிய இனங்களில் ஹன் இனம் மிகப் பெரிய இனமாகும். இதன் மக்கள் தொகை 93 விழுக்காடாகும். ஏனைய 55 தேசிய இனங்கள் சிறுபான்மைத் தேசிய இனம் என அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மேற்குப் பகுதியில் வாழ்கின்றன. சீனாவின் மங்கோலிய இனம் முக்கியமாக வடக்கிலான மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தில் வாழ்கின்றது. சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட இனம் மங்கோலிய இனமாகும். இதன் மக்கள் தொகை 40 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புல் செழுமையாக வளரும் போதும், கால்நடைகள் உடல்நலத்துடன் வளரும் போதும், புல்வெளியில் பாரம்பரிய விழாவான – நடாமு நடைபெறும். உள் மங்கோலியாவில் வசிக்கும் மங்கோலிய இன மக்களின் மிக முக்கிய விழா இதுவாகும். இது 3 நாள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. பல்வேறு இடங்களில், நடாமு விழாவின் போது, சீரான காலநிலைக்காக மக்கள் முதலில் காவு கொடுக்கின்றனர். பின்னர், மங்கோலிய இனத்தின் வலுவான வெளிப்படையான குணநலன்களை வெளிப்படுத்தும் குதிரைப் பந்தயம், மல்யுத்தம் ,அம்பு எய்தல் போன்ற அரங்கேற்றங்கள் இடம்பெறுகின்றன. இரவில், மா தௌ எனும் இசைக் கருவியை இசைத்த வண்ணம், ஆண்கள் இறைச்சி உண்டு, மது அருந்துக்கின்றனர். பெண்கள் ஆடிப் பாடுகின்றனர். மக்கள் அனைவரும் மகிழ்ச்சி கடலில் மூழ்குகின்றனர். வடக்கிலான உள் மங்கோலிய புல்வெளியை விட்டு, தென்மேற்கு சீனா வந்தால். இங்கே 30க்கும் அதிகமான சிறுபான்மை தேசிய இனங்கள் வசிப்பதைக் காணலாம். அவற்றில்,壮,யி, மியௌ, துன், பெய், தெய் ஆகிய இனங்களைச் சேர்ந்த மக்களின் தொகை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளன. யுனான் மாநிலம் மிக அதிகமான சிறுபான்மைத் தேசிய இனங்களைக் கொண்ட மாநிலமாகும். அங்கே 25 சிறுபான்மைத் தேசிய இன மக்கள் வசிக்கின்றனர். அவற்றில் பெய் இன மக்கள் தாலி பெய் இன தன்னாட்சி சோவில் குழுமி வாழ்கின்றனர். பெய் இன மக்கள் வெள்ளை நிறத்தை மிகவும் விரும்புகின்றனர். அவர்களுடைய ஆடைகள் , கட்டிடங்கள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன. சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனங்களில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இனம் சுவான் இனமாகும். இதன் மக்கள் தொகை ஒரு கோடியே 50 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. குவான் சி சுவான் இன தன்னாட்சி பிரதேசத்தில் வசிக்கும் இவ்வினம், சீனாவில் பாடலை மிகவும் விரும்பும் இனமாகும். சுவான் இன மக்கள் குழுமி வசிக்கும் கிராமங்களிலோ, மலைப் பிரதேசங்களிலோ, பாடலானது மக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளது. தாங்கள் கண்டது கேட்டது என எல்லாவற்றை பாடலின் மூலம் வர்ணிக்கலாம். சந்திர நாள்காட்டியின் படி ஒவ்வொரு ஆண்டின் மார்ச்சு 3ந் நாள், சுவான் இன மக்களின் பாடல் விழாவாகும். இந்நாளில், அவர்கள் மிகவும் மகிழ்ச்சி கொள்கின்றனர். மிக அழகிய ஆடை அணிந்து , விழாவில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் வண்ணக் கட்டிடங்களை கட்டியமைத்து, பாடல் போட்டி நடத்தி, வண்ணப் பந்தை எறிந்து, காதலியைத் தேர்ந்தெடுப்பார்கள். மலை பாடலை பாடுவது என்பது, மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும். ஆசை தீர ஆடிப்பாடி, தனது வாழ்க்கையை வெளிப்படுத்தி, காதல், நட்புறவு, இயற்கை ஆகியவற்றைப் போற்றுகின்றார்கள். தேர்ச்சி பெற்ற சில பாடகர் பாடகியர் பாடல் போட்டியில் கலந்து கொள்ளலாம். வெற்றி பெற்றவர்கள் அடிக்கடி காதலையும் பெறலாம்.
|
|
|