• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2003-12-24 16:45:13    
திபெத்தில் உயிரின வாழ்க்கைச் சூழல்

cri
உலகின் கூரை எனப்படும் சிங்காய் திபெத் பீடபூமியில் அமைந்துள்ள திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், சீனாவின் பல பெரிய ஆறுகள் ஊற்றெடுக்கின்றன. இங்கு உயர் மலைகளும் உறைபனி நிலமும், நிறைந்து காணப்படுகின்றன. புவியியல் நிலைமை காரணமாக, திபெத் வேளாண்மை மற்றும் தொழிற்துறை வளர்ச்சி மந்தமாக உள்ளது. 1951ல் திபெத் சமாதான முறையில் விடுதலையடைந்த பின் மத்திய அரசின் உதவியுடன் இங்கு நெடுஞ்சாலைகள் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன. மின்னாற்றல் துறை உணவுப்பொருட்களின் பதனீட்டுத்துறை உள்ளிட்ட பல தொழிற்துறைகள் வளர்க்கப்பட்டுள்ளன. இங்குள்ள மக்கள் நவீன வாழ்க்கை நடத்தத் துவங்கியுள்ளனர். லாஸா ஷிகாச் உள்ளிட்ட சில முக்கியமான நகரங்களில் மக்கள் வாழ்கின்றனர். இங்கு தொழிற்துறைகளும் வளர்ச்சியுடைந்துள்ளன. முன்பு சூழல் பாதுகாப்பு பற்றி மக்கள் அறிந்திராத காரணத்தால், லாஸா நகரின் இயற்கைச் சூழல் கடுமையாகச் சீர்குலைக்கப்பட்டிருந்தது. பறநகரிலுள்ள லாலு சதுப்பு நிலமானது இதற்குத் தெளிவான எடுத்துக்காட்டாகும். 6.2 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய இச்சதுப்பு நிலம் லாஸாவின் மொத்த நிலப்பரப்பில் 11 விழுக்காடாகும். பல்வகைப் பறவைகளும் அங்கு வாழ்கின்றன. இது இயற்கையாக அமைந்த விலங்குகாட்சி சாலை எனவும் கூறலாம். இதன் 95 விழுக்காட்டுக்கு மேற்பட்ட இடப்பரப்பு, செடிகளால் விரிவாக்கப்படுகின்றது. பெருமளவு ஆக்சிஜின் இங்கு உருவாக்கப்பட்டதால் லாஸா நகர் செவ்வனே பேணிக்காக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்பு ஆயர்கள் அளவுக்கு மீறி மேய்ச்சலில் ஈடுபட்டு, மனம் போனவாறு புல்லைத் தோண்டியதால் இச்சதுப்பு நிலத்தின் உயிரின வாழ்க்கைச் சூழல் சீர்குலைக்கப்பட்டது. இதனால் லாஸா நகரின் சூழ் நிலை நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது. அருகில் வசிக்கும் நகரவாசி பாலாம் அம்மையார் கூறுகிறார். முன்பு நாங்கள் இன்னல் மிகுந்த வாழ்க்கையை நடத்தினோம். எரி பொருட்கள் குறைவு. பிழைப்புக்காக மலைக்குச் சென்று மரஞ்செடிகளைப் பிடுங்கி வங்தோம். சதுப்பு நிலத்துப் புல்லை, அடுப்பு எரிக்க பயன்படுத்தினோம். இதனால் பாதுகாப்புச் சூழல் வெகுவாகச் சீர்குலைக்கப்பட்டது என்றார் அவர். 1995ஆம் ஆண்டு துவக்கம் திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு இங்கு இயற்கைப் புகலிடங்களை உருவாக்கியுள்ளது. சுமார் 10 கோடி ரென்மின்பி யூவான் முதலீட்டில் இப்பிரதேசம் பேணிக்காக்கப் பெற்றுள்ளது. இப்போது அவர்கள் பிழைப்புக்காக இயற்கைச் சூழலைச் சீர்குலைக்கத் தேவையில்லை. சமையலுக்காக திரவப் பெட்ரோலிய வாயுவையும், குளிக்க சூரிய வெப்ப நீர் கருவியையும் பயன்படுத்துகின்றனர். முன்பு காணப்படாத பறவைகள், மீண்டும் இச்சதுப்பு நிலத்துக்குத் திரும்பியுள்ளன. திபெத்தின் தனிச்சிறப்பான இயற்கைச் சூழலையும் வளமிக்க உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில், திபெத்தில் இயற்கைப் புகலிடங்கள் நிறுவப்பட்டு. உயிரின வாழ்க்கைச் சூழல் சீர்குலையாமல் தடுக்கும் பொருட்டு, கண்டிப்பான தண்டனை நடவடிக்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. புள்ளிவிபரங்களின் படி, கடந்த ஆண்டு இறுதி வரை திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் 18 இயற்கைப் புகலிடங்கள் நிறுவப்பட்டுள்ளன. அரசு நிலை வன விலங்குகளும் தாவரங்களும் தன்னாட்சிப் பிரதேசத்தில் நன்கு பேணிக்காக்கப்பட்டுள்ளன. தன்னாட்சிப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி பிரதேசம் பாதுகாக்கப்பபட்டுள்ளது. இன்று திபெத்தில் பல்வகை விலங்குகள் வாழ்கின்றன. மரங்களும் தழைத்து வளர்கின்றன. தற்போது திபெத்தில் உள்ள காடுகளும் ஏரிகளும், பெரும்பாலும் அகழ்வு செய்யப்படாத நிலையில் உள்ளன. மக்கள் தொகை மற்றும் தொழில்துறை செறிந்து நிற்கும் லாஸா நகரில் கூட நபர்வாரி புல்தரை பரப்பளவு 12 சதுர மீட்டராகும். லாஸாவில் வசிக்கும் 67 வயதான கியூசியா சுற்றுலாவில் போரார்வம் கொண்டுள்ளார். அவர் லாசாவின் பல இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறார். தமது ஊரின் வாழ்க்கை சூழ்நிலையின் மாற்றம் பற்றி அவர் கூறுகிறார். முன்பு நான் பல இடங்களுக்குச் சென்ற போது, வழி நெடுகிலும் வயல்களில் மரங்களோ செடிகளோ காணப்படவில்லை. ஆனால், இப்போது நிலைமை பெரிதும் மாறியுள்ளது.