• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2003-12-24 16:45:13    
சீனாவின் உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் பையின்கலெ வட்டம்

cri
கஷ்கடன் மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில் 160 கிலோமீட்ட்ர் தொலைவில் அமைந்துள்ள பையின்கலெ வட்டத்தில் 3576 ஆயர்கள் வாழ்கின்றனர். கால் நடை வளர்ப்பில் அவர்கள் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டு வருகின்றனர். சீர்திருத்தம் மற்றும் வெளி நாட்டுத்திறப்பு பணி துவங்கியது முதல் குறிப்பாக மேற்கு பகுதியை வளர்ச்சியுறச்செய்வதென்ற நெடுநோக்குத் திட்டம் நடைமுறைக்கு வந்தது முதல், இவ்வட்டத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆயர்களாகிய எங்கள் வாழ்க்கை நிலை கடந்த சில ஆண்டுகளில் விரைவாக உயர்ந்துள்ளது. ஓரளவு, வசதி படைத்த குடும்பம் என்ற நிலையை அடையும் பொருட்டு திட்டப்பணிகளுக்கென 70 லட்சம் யூவானை நாங்கள் முதலீடு செய்துள்ளோம் என்று இவ்வட்டத்தின் தலைவர் மெலாசிதா கூறினார். ஈராயிரத்து மூன்றில் முழு வட்டத்திலும் 17 கிணறுகள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. மிக ஆழமான கிணறு 80 மீட்டர் ஆழமானது. இனி வறட்சி ஏற்பட்டால் மக்களும் கால்நடைகளும் தண்ணீருக்காகக் கவலைப்படத் தேவையில்லை. முழு வட்டத்திலும் உயர் அழுத்த மின் கம்பி வடங்கள் பொருத்தப்பட்டு ஆயர்தம் வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கிறது. கோடைகாலத்தில் ஆயர்கள் புல்வெளியில் ஆடுமாடுகளை மேய்க்கும் போது, அவர்களுக்கு பொழுதுபோக்கு வாய்ப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு ஆயர்கள் காலநிலையைச் சார்ந்து மேய்ச்சல் வேலையில் ஈடுபட்டு வந்தனர். இப்போது அவர்கள் அறிவியல் முறையில் மேய்ச்சல் பணியில் ஈடுபடுகின்றனர். கோடைகாலத்தில் புல் வெளியில் கால்நடைகளை மேய விடுகின்றனர். குளிர்காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் அவற்றைச் சுற்றி வளர்த்து மேய் விடுகின்றனர். முன்பு ஆடு குட்டிகளை ஈனும் போது ஆயர்கள் கவலைப்பட்டனர். இப்போது 80 விழுக்காட்டு ஆயர்கள் தமது வீட்டில் ஆட்டுப்பட்டி அமைத்துள்ளனர். குளிர்காலத்தில் ஆட்டுக்குட்டிகள் வெப்பமான பட்டிகளில் பிறக்க வாய்ப்புண்டு. ஒரு வெப்ப பட்டிக்கு 10 ஆயிரம் யூவான் செலவாகின்றது. இதில் அரசு 70 விழுக்காடும். ஆயர்கள் 30 விழுக்காடும் முதலீடு செய்கின்றனர். இவற்றைக் கட்டியமைப்பதன் மூலம் பிறக்கும் ஆட்டுக்குட்டிகளின் உயிர் வாழும் விகிதம் 85 விழுக்காட்டை எட்டியுள்ளது. சில 100 விழுக்காட்டை அடைய கூடும். ஆட்டுக்குட்டிகளின் நோய்த் தடுப்பு ஆற்றலும் பெருமளவு உயர்ந்துள்ளது என்று, இவ்வட்டத்தின் தலைவர் மெலாசிதா கூறினார். புல் வெளியும் கால்நடைகளும் ஆயர்களின் உயிர் நாடி என்பதால் புல்வெளியை நன்கு பேணிக்காத்து கால்நடை இனங்களைச்சீர் செய்யும் பொருட்டு இவ்வட்ட அரசு ஆயர்களுக்கு உதவி வருகிறது. முழு வட்டத்தின் ஊழியர்கள் 2003ஆம் ஆண்டு கோடைகாலத்தில் ஒவ்வொரு ஆயர் வீட்டுக்கும் சென்று இது பற்றி பிரச்சாரம் செய்தனர். 2001ஆம் ஆண்டு அரசு வெளியூரிலிருந்து தரமிக்க மாடுகளை உட்புகுத்தியுள்ளது. 2002ல் செயற்கை மாட்டு இனப்பெருக்கம் செய்யப்பட்டது. இதன் விளைவாக, ஒவ்வொரு கிராமத்திலும் 90 விழுக்காட்டுக் காளைகளின் இனம் சீரடைந்துள்ளது. இங்கு 5 இனப்பெருக்க நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. நோய்த் தடுப்புப் பணியில் மும்முரமாக ஈடுபடுகிறோம். கால்நடைகளுக்குத் தடுப்பு ஊசி போடப்படுகிறது. இதனால், மற்ற இடங்களில் நோய் ஏற்பட்டாலும் நாங்கள் கவலைப்படுவதில்லை என்றார் வட்டத்தலைவர் மெலாசிதா. இவ்வட்டத்திலுள்ள கால்நடை மருத்துவர்கள் வசந்தகாலத்திலும் இலையுதிர்காலத்திலும் மேய்ச்சல் நிலங்களுக்குச் சென்று கால்நடைகளை மருத்துவ சோதனை செய்கின்றனர். பையின்கலெ வட்டத்தில் துவக்கப்பள்ளியும் இடைநிலைப் பள்ளியும் உள்ளன. மாணவர்கள் அப்பள்ளியில் தங்கி கல்வி கற்கின்றனர். 2002இல் வட்ட அரசு பத்து வட்சம் யூனான் முதலீடு செய்து வெப்பவாயு குழாய்களைக் கட்டியமைத்துள்ளது. மாணவர்களின் விடுதிகளில் குளியல் அறையுடன் கூடிய அறைகள் உள்ளன. ஆசிரியர்கள் அயராது பணிபுரிகின்றனர். துவக்கப்பள்ளி மாணவர்களின் ஆண்டுக் கல்விக் கட்டணம் 150 யூவானும் இடைநிலை பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம் 260 யூவானும் ஆகும். வட்ட அரசு, விடுதி வாடகையைச் செலுத்துகின்றது. மாணவர்கள் தத்தம் உணவுப்பொருட்களைக் கொண்டு வந்து உண்கின்றனர். இன்னல்பட்ட மாணவர்களுக்கு குறிப்பாக இன்னல் பட்ட ஆயர்தம் மாணவர்களுக்கு வட்ட அரசும் பள்ளியும் உதவித் தொகை வழங்குகின்றன. என் குடும்பத்தில் 4 பேர் உள்ளனர். எனக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. மூத்த பிள்ளைக்கு 15 வயது. இளைய பிள்ளைக்கு வயது 12. இவர்கள் பள்ளியில் கல்வி கற்கின்றனர். இவர்கள் பல்கலைக்கழத்தில் சேர வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று ஆயர் ஒருவர் கூறினார். இப்போது கட்சியின் கொள்கை சிறப்பானது. வாழ்க்கை நிலையும் மேம்பட்டுள்ளது. உடைகளும் அன்றாடப் பயன்பாட்டுப்பொருட்களும் எங்கும் கிடைக்கின்றன. உபரி பால், சோயா பீன் முதலியவற்றை சுற்றுலாத் தலங்களுக்குக் கொண்டு சென்று விற்கிறோம் என்று புல் வெளியில் பரபரப்பாக வேலையில் ஈடுபட்டுள்ள மங்கோலிய இனப்பெண்மணி கூறினார். அவர்கள் கூறியது போல் மங்கோலிய கூடாரமெங்கும் வண்ணத் தொலைக்காட்சிகள், மோட்டார் பொருத்திய மிதி வண்டிகளைக் காணலாம். கூடாரத்தின் உச்சியில் காயவைக்கப்பட்ட பால் சோயா தோஃபையும் காணமுடிந்தது. அறிவியல் பரவலாக்கப்படுவதுடன் ஆயர்களின் வாழ்க்கை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஓங்கி வளர்ந்து வருவதைக்கண்கூடாகக் காணமுடிகிறது.