• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-01-21 10:18:12    
பல்வேறு தேசிய இனங்களின் பழக்க வழக்கங்கள்

cri

யுனான் மாநிலம் மிக அதிகமான சிறுபான்மைத் தேசிய இனங்களைக் கொண்ட மாநிலமாகும். அங்கே 25 சிறுபான்மைத் தேசிய இன மக்கள் வசிக்கின்றனர். அவற்றில் பெய் இன மக்கள் தாலி பெய் இன தன்னாட்சி சோவில் குழுமி வாழ்கின்றனர். பெய் இன மக்கள் வெள்ளை நிறத்தை மிகவும் விரும்புகின்றனர். அவர்களுடைய ஆடைகளும் கட்டிடங்களும் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன.

சீனாவின் சிறுபான்மைத் தேசிய இனங்களில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இனம் சுவான் இனமாகும். இதன் மக்கள் தொகை ஒரு கோடியே 50 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. குவான் சி சுவான் இனத் தன்னாட்சி பிரதேசத்தில் வசிக்கும் இவ்வினம், பாடலை மிகவும் விரும்பும் இனமாகும். பாடலானது இந்த மக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்துள்ளது. தாங்கள் கண்டது கேட்டது என எல்லாவற்றையும் பாடலின் மூலம் வர்ணிக்கின்றனர். சந்திர நாள்காட்டியின் படி ஒவ்வொரு ஆண்டின் மார்ச்சு 3ந் நாள், சுவான் இன மக்களின் பாடல் விழாவாகும். இந்நாளில், அவர்கள் அழகிய ஆடை அணிந்து , விழாவில் கலந்து கொள்கின்றனர். அவர்கள் வண்ணக் கட்டிடங்களை கட்டியமைத்து, பாடல் போட்டி நடத்தி, வண்ணப் பந்தை எறிந்து, காதலியைத் தேர்ந்தெடுப்பார்கள். மலை பாடலை பாடுவது என்பது, மிக முக்கியமான நடவடிக்கையாகும். ஆசை தீர ஆடிப்பாடி, தனது வாழ்க்கையை வெளிப்படுத்தி, காதல், நட்புறவு, இயற்கை ஆகியவற்றைப் போற்றுகின்றார்கள்.


1  2