|
|
(GMT+08:00)
2004-01-21 15:34:16
|
|
வாதுமை இறைச்சி வறுவல்
cri
தேவையானவை
ஆட்டிறைச்சி 300 கிராம்,
வாதுமைக் கொட்டை 100 கிராம்,
வெங்காயம் 7.5 கிராம்,
நசுக்கிய இஞ்சி சிறிதளவு,
சமையல் எண்ணெய் 150 கிராம்,
ஸ்டார்ச் தண்ணீர் கலவை 10 கிராம்,
மிளகுத்தூள் சிறிதளவு,
உப்பு 3கிராம்,
முட்டையின் வெள்ளைப் பகுதி ஒன்று,
ஸ்டார்ச் 10 கிராம்.
செய்முறை:
வாணலியில் வாதுமைக் கொட்டைகளை வறுத்து,
தனியே தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இறைச்சியை 1 சென்டிமீட்டர் அளவுக்குத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஒரு கிராம் உப்பு, முட்டையின் வெள்ளைப் பகுதி ஸ்டார்ச் ஆகியவற்றின் கலவையில் இறைச்சித் துண்டுகளை உருட்டி எடுக்கவும். இப்போது வாணலியில் 100 கிராம் சமையல் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும் இறைச்சித் துண்டுகளை அதில் போட்டு சற்று நேரம் வறுக்கவும் பிறகு எண்ணெயை வடித்து விடவும்.
சிறிதளவு எண்ணெயை வாணலியில் ஊற்றி, வெங்காயம் இஞ்சி
ஆகியவற்றைப் போட்டு வதக்க வேண்டும். பிறகு, உப்பு, மிளகுத் தூள், இறைச்சித் துண்டுகள் வாதுமைக் கொட்டைகள் ஆகியவற்றை அதில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். சிறிது நேரம் கழிந்த பின் ஸ்டார்ச் தண்ணீர் கலவையை ஊற்றி, கொதிக்கவிட வேண்டும். அதன் பின்னர் தட்டுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
|
|
|