• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-01-29 14:51:11    
எலும்புக்கு மருந்து

cri
எலும்பு நோய்கள்—இளைஞர் முதல் முதியோர் வரை—அனைவரிடமும் பாரபட்சமின்றி ஏற்படுகின்றன. இதன் காரணமாக, அவர்கள் வலியால் துடிப்பதுண்டு. சிலர் ஊனம் அடைவதும் உண்டு. பொதுவாக, அறுவை சிகிச்சை தான் இத்தகைய எலும்பு நோய்களுக்கு வழி. ஆனால், இப்போது, இத்தகைய அறுவை சிகிச்சை இல்லாமல், மருந்துகள் மூலம் இந் நோய்களைக் குணப்படுத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இத்தகைய மருந்துகளை, சீன மருத்துவர் தயாரித்துள்ளனர். சீன மூலிகைகளைக் கொண்டு, ஸீபோ நகர மருத்துவர்கள், இந்த மருந்துகளைத் தயாரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட இடத்தில், மருந்தைத் தடவினால் போதும். அறுவை சிகிச்சை வேண்டாம். நோயினால் ஏற்படும் வலியைக் குறைப்பதற்கு என்றே, வேறு சில மருந்துகளையும் அவர்கள் தயாரித்துள்ளனர். நிண எலும்பு வீக்கம், எலும்புக் காச நோய் என மக்களை அச்சுறுத்தும் எலும்பு நோய்கள்பாடு, இனி திண்டாட்டம் தான்.