|
 |
(GMT+08:00)
2004-01-29 14:51:11
|
 |
அதிகரிக்கும் ஆயுள்
cri
உலகில், நுரையீரல் புற்று நோயினால், ஆண்டுதோறும் மூன்று இலட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர்.
ஆனால், சில நோயாளிகள், கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விடக் கூடுதல் ஆயுள் பெற்றிருப்பதை, ஆய்வு உணர்த்துகிறது.
இதற்கு என்ன காரணம். சிறப்பான சிகிச்சை, வெகு தொடக்கத்திலேயே நோயை—நோயின் அறிகுறியை—கண்டறியும் முறை ஆகியவையே இந்த முன்னேற்றத்திற்குக் காரணங்களாகும்.
பின்லாந்திலுள்ள ஊலு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான ரீட்டா மகிதாலோ, நுரையீரல் புற்று நோயாளிகள் குறத்து டாக்டர் பட்டத்திற்கு ஆய்வு மேற்கொண்டார்.
நுரையீரல் புற்று நோயாளிகள் உயிர் வாழும் விகிதம் தற்போது 3 மடங்கு அதிகரித்திருக்கிறது என்று அவர் கண்டறிந்திருக்கிறார்.
எடுத்துக்காட்டாக, ஊலு நகரில், எழுபதுகளில், நுரையீரல் புற்று நோய் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 4 விழுக்காட்டினர் மட்டுமே, அடுத்த 5 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தனர்.
ஆனால், தொண்ணூறுகளில், இவ்விகிதம் 12 விழுக்காடாக அதிகரித்தது.
தற்போது, மிகச் சிறப்பான மருந்துகள் கிடைப்பதால், இவ் விகிதம் மேலும் கூடுதலாக இருக்க வாய்ப்புண்டு என்று மகிதாலோ நம்புகிறார்.
|
|
|