• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-02 20:05:10    
சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஆதரவு

cri
2007ம் ஆண்டில் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஷாங்காய் மாநகர் நடத்துவதற்கு சீன அரசு ஆதரவு அளிப்பதாக அரசு தலைவர் ஹுச்சின்தாவ் கூறியுள்ளார். 2ம் நாள் பெய்சிங்கில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கௌரவத் தலைவர் யூனிஸ் கென்னிடி ஷிரெவெர் தலைமையிலான பிரதிநிதிக் குழுவைச் சந்தித்துரையாடிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊனமுற்றோர் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மேற்கொண்டுவரும் முயற்சியை அவர் பாராட்டினார். சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதன் மூலம் சீன மக்களுக்கும் பன்னாட்டு மக்களுக்குமிடையிலான புரிந்துணர்வும் நட்பும் அதிகரித்து அவர்களுக்கிடையிலான நட்பார்ந்த பரிமாற்றமும் ஒத்துழைப்பும் முன்னேற்றுவிக்கப்படும் என்று ஹுச்சின்தௌ நம்பிக்கை தெரிவித்தார். 2007ம் ஆண்டு 12வது சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான கையொப்பமிடும் விழா 2ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்றது. சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளதை இது எடுத்துக்காட்டுகின்றது.