• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-02 14:07:06    
தலைவர் மாசேதுங்கின் ஆயுள் இரச்சியம்

cri
முறையான உணவு உடல் பயிற்சி என்பன மாசேதுங் கடைப்பிடித்த முக்கிய விதிகளாகும். தமக்கு ஒத்துப் போகும் உணவை உண்பதில் தலைவர் மாஓ ஊன்றிநின்றார். சாதம், காய், சூப் ஆகியவை தவிர சக்கிரவளிக்கிழங்கு, மக்காச்போன்ற நவ தானியங்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. எளிய உணவு என்றாலும் மிக்கது. பூண்டு, மிளகாய், இஞ்சி முதலியவர்றை மூலிகை மருந்து எனும் கோணத்திலிருந்து பார்த்தால் உடம்புக்கு நன்மை பயக்கும் என்பதால் மாஓ அவற்றை விரும்பினார். காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் தேநீர் அருந்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் பயன்படுத்திய தேயிலை சீனாவின் செச்சியான் மாநிலத்தின் ஹான்சோவில் விளையும் “லூங்சிங்”தேயிலையாகும். வெந்நீரில் இத்தேயிலையைப் போட்டு தேநீராக்கி அருந்தினால் சுறுசுறுப்பாக இருக்கலாம். செறிந்த கா:.பி சோடா, தேயிலை சோடா உள்ளிட்ட உயிரின சோடாக்கள் தேயிலையில் உள்ளன. இறைச்சியை உண்ட பின் ஏற்படும் அமிலத்தை தேயிலையிலுள்ள சோடா குறைக்கலாம். ரத்தத்திலே இடம் பெறும் அமிலம், சோடா ஆகியவற்றைச் சம நிலையில் இருத்திட இது துணைபுரியலாம். இதய நோய்த் தடுப்புக்குத் தேனீர் அருந்துவது கைகொடுக்கலாம். உடற்பயிற்சி என்ற வகையில் நடப்பது தலைவர் மாஓவுக்குப் பிடித்தமான ஒன்றாகும். வேலை நேரத்துக்குப் பின் வெளியே சற்று நேரம் நடப்பது அவருடைய வாழ்நாள் அனுபவமாகும். நடனமாடுவது அவர் ஈடுபட்ட இன்னொரு உடல் பயிற்சியாகும். உணர்ச்சிகரமான இசை அவருக்குப் பிடிக்கும். பாமர மக்களுடன் தொடர்பு கொள்ளும் நல்ல வாய்ப்பாக மாஓ கருதினார். மலை ஏற்றம், அவருக்குப் பிடித்தமான உடல் பயிற்சி ஆகும். இளமைக் காலத்தில் இடியிடித்து மழை பெய்த இரவில் தனியாக மலையில் ஏறி கவிதை பாடினார். நீச்சலசடிப்பது வாழ்நாளில் மாஓவுக்கு மிகப் பிடித்தமான உடல் பயிற்சியாகும். 63 வயதில் முதல் முறையாக யாங்சி ஆற்றை அவர் நீந்திக் கடந்தார். 73 வயதில் அவர் மீண்டும் யாங்சி ஆற்றைக் நீந்திக் கடந்தார். வாழ்நாளில் 17 முறை தலைவர் மாஓ யாங்சி ஆற்றில் நீச்சலடித்திருக்கிறார். தலைமுடியை வாரிவிடுவதில் அவர் கவனம் செலுத்தினார். வேலையினால் ஏற்பட்ட களைப்பு நீங்கும் வகையில் தலைமுடியை வாரிவிடுமாறு பணியாளரை அவர் கோருவார். இது அவர் மேற்கொண்ட முக்கிய உடல் பாதுகாப்பு வழிமுறையாகும். ரத்த ஓட்டம் சீராக இருக்குமாறு பார்த்துக் கொண்டார். குளிப்பது மாஓவுக்கு பிடிக்கும். கல்லூரியில் பயின்ற போது அதிகாலையில் கிணற்றருகே நின்ற வண்ணம் உடம் மீது நீரை ஊற்றி தோல் சிவக்கும் வரை அதை த் தடவிக் கொடுப்பார். இதன் மூலம் தடுமண எதிர்த்து நிற்க முடியும் என மாஓ நம்பினார். ஆக உடற்பயிற்சியில் ஈடுபடுவது என்பது நீண்ட வாழ்நாளின் இரதசியம் என்பதை மாசேதுங்கின் வரலாறு உணர்த்துகின்றது.