• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-02 14:07:06    
தூக்கத்தக்கும் அழகிற்குமிடையிலான ரகசியம்

cri
போதிய அளவு தூங்குவது, பெண்களின் அழகைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானது. போதியளவில் தூங்காவிட்டால் பெண்ணின் தோல் மென்மை தன்மையா இழந்துவிடும். கண்கள் சோர்ந்து காணப்படும். கவனம் செலுத்துவது குறையும். மாறாக நன்றாக தூங்கினால் களைப்பு நீங்கிவிடும். உடலில் இருக்கின்ற ஹார்மோன் துண்டப்படும். தோல் பளபளப்பாக இருக்கும். முகம் சிவப்பாக காட்சியளிக்கப்படும்.

நாள்தோறும் நன்றாகத் தூங்கினால், பெண்மணிக்கு அது நல்லது. பலர் வார இறுதி நாளில் தூங்கும் நேரத்தை அதிகரிப்பதன் மூலம் பற்றாக்குறையை நிரப்புவர். இது தவறானது. நீண்ட நேரம் தூங்குவதற்கும் குறுகிய நேரம் தூங்குவதற்குமிடையே தொடர்பில்லை. குறுகிய நேரமானாலும் ஆழ்ந்து தூங்க வேண்டும். பின் குறைவாக தூங்க வேண்டும். இப்படி மூன்று அல்லது நான்கு முறை மாறி மாறி தூங்கினால் நல்ல தூக்கம் வருவது உறுதி நீண்ட

நேரம் நீடிக்காமல், நன்கு தூங்க வேண்டுமாயின் படுக்கையை மாற்ற வேண்டும். நீர் இடம் பெறும் படுக்கை பாரம்பரிய தூக்க வடிவத்தை மாற்றியுள்ளது. மனிதரைத் தூங்க விடும் பங்கினை அது வெளிக் கொணர்கின்றது. இத்தகைய படுக்கையின் அடிப்பகுதியில் நீரைச் சேமிக்கும் அளவு ரப்பர் மெத்தை உண்டு. இதில் ஊற்றப்படும் நீர் நாம் தூங்குவதற்கு வசதியாக அமைகின்றது. ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதியை மனிதர் தூங்குவதில் கழிக்கின்றார். அவருக்குப் பொருத்தமான படுக்கைக் மிகவும் முக்கியமானது. பாரம்பரிய படுக்கை உடலின் இயல்புக்கு ஏற்றதல்ல. தூங்குவதன் காரணமாக உடலின் சில பகுதிகள் அமுக்கத்துக்குள்ளாகின்றன.. தசைநார், எலும்பு, ரத்தக் குழாய் ஆகியவை நீண்ட நேரமாக அழுத்தப்பட்டிருந்தால் உடலில் ரத்த ஓட்டம் தடைப்படும். உடலின் பல்வேறு புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்க முடியாமல் போக வாய்ப்புண்டு. நீர் இடம் பெறும் படுக்கை மனித உடலின் வளைந்து கொடுக்கும் இயல்புக்கு உகந்தது. நீரின் மிதமான ஆற்றலில் மனித உடல் மென்மையாகத் தூக்கியெறியப்படும். உடலின் எடை படுக்கையில் சராசரியாகப் பரவலாகின்றது. தாராள உணர்ச்சி மனிதருக்கு ஏற்படும். 500 கிலோகிராம் எடையுள்ள அழுத்தத்தை நீர் இடம் பெறும் படுக்கை தாங்க முடியும். அதன் ஆயுள் 10 ஆண்டுக்கு மேலாகும்.

படுக்கையிலான நீரின் வெப்ப அளவு கட்டுப்படுத்தப்பட முடியும். 25 சதம பாகை முதல் 38 சதம பாகை வரை அது மாற்றப்படலாம். ஆகவே குளிர்காலத்தில் வெப்பநிலையிலும், கோடைகாலத்தில் குளிர்ச்சி நிலையிலும் மனிதர் படுக்கையில் படுத்து உறங்கலாம்.