 சூப் நலவாழ்வு இப்போது ஜப்பானில் மிகவும் வரவேற்கப்படுகின்றது. குடும்பத்திலும் உணவகத்திலும் காய் சூப் அருந்துவதன் மூலம் நோயை நீக்க அனைவரும் ஆவல்படுகின்றனர். நாளுக்கு மூன்று முறை உணவு உண்ணும் போது இந்தச் சூப் அருந்துகின்றர். பொதுவாக உணவு உண்ணுவதற்கு முன் மூ வகை சூப் அருந்துவது வழக்கம். எடுத்துக்காட்டாக, காலைச் சிற்றுண்டியின் போது வெள்ளைக் கீரை எனும் பைச்சாய் சூப், கேரட் மற்றும் அவரை முளையால் தயாரிக்கப்பட்ட சூப் ஆகியவற்றை அருந்த வேண்டும். பால், முட்டை, ரொட்டி ஆகியவற்றில் மக்கள் இனி கவனம் செலுத்த மாட்டார்கள். காலை எழுந்தவுடன் காய் சூப் அருந்த வேண்டும். பின் கேக் உட்கொள்ள வேண்டும் என்று குழந்தைகள் உள்ளிட்டோருக்கு முன்மொழிவு வைக்கப்படுகின்றது.
மதிய உணவுக்கான சூப், பல்வகைப்பட்டது. எடுத்துக்காட்டாக பலவகை காய்கள் இடம்பெறும் சோயா சூப் ஜப்பானில் மட்டும் உண்டு. அது "சோயா காய் சூப்"என்று அழைக்கப்படுகின்றது. கடல் காய் சூப், காளான் சூப், இறைச்சியும் காயும் கலந்த சூப் போன்றவை ஜப்பானியப் பாணியிலான மதிய உணவின் போது மக்களால் இவை அனுபவிக்கப்படுகின்றன.
இரவு உணவின் போது முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சூப்பை அருந்த வேண்டும். சாதத்துக்குப் பதிலாக சூப் கூடுதலாக அருந்துவது நல்லது.
ஜப்பானில் பலவீனமானவர் சூப் அருந்துவதை நோயை நீக்கி உடலை வலுப்படுத்துவதற்கான சத்துணவாக கருதுகின்றனர். உயர் ரத்த அழுத்த நோய் நீரிழிவு நோய், இரைப்பை நோய், குடல் நோய் போன்றவற்றுக்குச் சிகிச்சை அறிப்பதற்கு காய் சூப் துணை புரியும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். நீண்டகாலம் சூப் அருந்துவதன் மூலம் இரப்பை புற்றுநோய், குடல் புற்றுநோய் ஆகியவை ஏற்படுவதை தடுக்க முடியும். காய் சூபின் சத்து மனித உடலால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது. உடல் வலிமைக்கு நன்மை பயக்கும். தவிர, சூப் தயாரிக்கும் போது, அறுசுவையூட்டும் பொருட்களைச் சேர்க்கத் தேவையில்லை. இயன்றவரை காயின் இயல்புச் சுவையை நிலைநிறுத்த வேண்டும்.
|