• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-02 14:07:06    
கால்களின் தூய்மை

cri
கலையரசி இரவில் படுக்கைப் போவதற்கு முன் சுற்று சூடான வென்னீரில் பத்து நிமிடம் முதல் 20 நிமிடம் வரை கால்களை வைத்திருக்க வேண்டும். நீரின் வெப்பத்தை நிலைநிறுத்தும் வகையில் வென்னீரைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற வேண்டும். பின் கால்களைச் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின் நல்ல தூக்கம் வருவது உறுதி. மனிதரின் உடல் நலத்தைப் பொறுத்தவரை கால்கள் தூணாகப் பங்கெடுக்கின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளுடன் அவை தொடர்பு கொண்டுள்ளன. கால் கட்டைவிரலானது கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றுடன் இணைந்து அவற்றைப் பாதுகாக்கின்றது. மோதிரக் கால்விரல் பித்தப்பையுடன் இணைந்து மலச்சிக்கலை நீக்குவதில் பங்கெடுக்கின்றது. சுண்டு விரல் சிறுநீர்ப்பையைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பேற்கின்றது. அதில் ஏற்படும் பல்வகை நோய்களுக்குச் சிகிச்சையளிக்கின்றது. பாதங்களைச் சுத்தமாக வைத்திருந்தால் சிறுநீரகங்கள் பலவீனப்படுவதைத் தடுக்கலாம். ஆகவே துளிக்கும் இதயமாக கருதப்படும் கால்களை அடிக்கடிக் கழுவித் தூய்மைப்படுத்துவது உடல் நலனுக்குத் துணைபுரியும். ஒவ்வொரு நாளிரவும் பாதங்களை நன்கு கழுவுவதன் மூலம், உடலின் ரத்த ஓட்டம் சீரப்படும். உடலுள்ள ஈரமும் வெப்பமும் குறையும். ஈரல், குடல் ஆகியவை மென்மையடையலாம். குளிர்காலத்தில் தூங்குவதற்கு முன், கால்களை கழுவினால், PUBIC REGION என்னும் புள்ளியில் விளையும் வெப்பம் உடலிலுள்ள நோய்களை அழிக்கும். நீரின் வெப்பம் 50 சதம பாகையாக இருப்பது உடம்புக்கு உகந்ததாகும். இரண்டு கைகளால் வென்னீர் கொண்டு கால்களைத் தேய்க்க வேண்டும். பின் 15 நிமிடம் வென்னீரில் பாதங்களை வைத்திருக்க வேண்டும். இதனால் உடலின் களைப்பு நீங்கும். இது எளிதானது. ஆனால் நீண்டகாலம் கடைபிடிப்பது கடினமானது. ஆனால் உடம்புக்கு நல்லது.