 ஒரு நாளைக்கு ஓரு ஆபில் தின்றால் மருத்துவர் தேவைப்படமாட்டார் என்பது நமக்குத் தெரிந்ததே. கொட்டைப் பழம், பயிர்கள், கீரை மற்றும் மெக்நீசியம் நிறைந்த உணவுப் பொருட்களை உண்டால் நீரிழிவு நோய் பீடிக்கும் விழுக்காடு குறையும் என்று புதிய ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. அமெரிக்காவில் 85 ஆயிரம் தாதிமார், மருத்துவத் தொழிலில் ஈடுபடும் 42 ஆயிரம் ஆடவர் ஆகியோரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். உணவுப் பழக்கத்துக்கும் நீரிழிவு நோய்க்குமிடையிலான தொடர்பை ஹாவ் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர் மதிப்பீடு செய்தனர். குடும்ப நல வரலாறு, வயது, விளையைட்டு, மது அருந்தும் அளவு, ஆகியவுற்றுக்கும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்குமிடையிலான தொடர்பை ஆராய்ந்தனர். மெக்நீசிய அளவு நீரிழிவு நோய் நிகழவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தவிர குடும்பத்தில் நீரிழிவு நோய், இதய நோய் புற்றுநோய் இல்லாத 39 ஆயிரம் பெண்டிரை 6 ஆண்டுகளாகப் பரிசோதணைக்குட்படுத்தினர். நீரிழிவு நோய் ஏற்படுவதை மெக்நீசியம் பாதிப்பதாக அவர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.
நீண்டகாலம் இறைச்சி சாப்பிடாமை நீண்ட நெடிய வாழ்வின் காரணியாகும்
நீண்டகாலமாக காய்கறி மட்டும் உண்பது, நீண்ட வாழ்வின் காரணமாகும். காய் மட்டும் உண்பதால் ஆயுள் நீடிக்கும் என பலர் நம்புகின்றனர். ஆனால் இது சரியல்ல என்று மருத்துவ நிபுணர் கருதுகின்றனர். உளவியல் ரீதியில் தீங்கு விளைவிக்கலாம். உடம்பு பலவீனமாகும். தலைமுடி நரைத்துப் போகும்., பற்கள் விழுந்துவிடும். எலும்பு முறியும், இதய நோய் ஏற்படும். இவை மங்கனீசு பற்றாக்குறையுடன் தொடர்புடையவை. மங்கனீசு பற்றாக்குறையினால், உடல் எலும்பின் வளர்ச்சி பாதிக்கப்படும். அது மட்டுமல்ல் உடம்பு வலிக்கும் காரணமாகும். சக்தியின்மை,
CAMEL BACK, எலும்பு முறிவு ஆகிய நோய்களை ஏற்படுத்தும். தாவர உணவுகளில் இடம்பெற்றுள்ள மங்கனீசு உடம்பினால் ஏற்றுக் கொள்ளப்படுவது கடினம். இறைச்சியில் நிறைந்த மங்கனீசு உடம்பினால் ஏற்றுக் கொள்ளப்பட முடியும். ஆகவே, முதியோர் நீண்டகாலத்துக்கு காய்கறி மட்டுமே உட்கொள்ளாமல் இறைச்சியையும் சேர்த்துக் கொள்வது நல்லது.
|