10 வது ஆசிய சாம்பியன் பட்ட துப்பாக்கிச்சுடும் போட்டி, மலேசியாவில் நடைபெறுகின்றது. பிப்ரவரி 16 ஆம் நாள், ஆடவர் குழுக்களுக்கான நகரும் டார்கெட் போட்டியில், சீன அணி, 1734 புள்ளிகளுடன், முதலிடம் பெற்றதோடு, இப்போட்டிக்கான உலக சாதனையையும் முறியடித்தது. இப்போட்டியில், இதுவரை, சீனா, 22 தங்கப்பதக்கங்களுடன் முன்னிலை வகிக்கின்றது.
|