• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-03 10:46:59    
நீச்சல்

cri
உலக கோப்பைக்கான குறுகிய தூர நீச்சல் போட்டித் தொடர் ஜெர்மனியில், சனவரி 18 ஆம் நாள் நிறைவுற்றது. 200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி போட்டியில், சீன வீராங்கனை யாங் யூ, 2 நிமிடம் 4.04 வினாடியில், முதலிடம் பெற்று, உலக சாதனையை முறியடித்தார். மகளிர் 400 மீட்டர் கலப்பு பாணி போட்டியில், சீனாவின் சோ யா பஃய், 4 நிமிடம் 34.85 வினாடியில், முதலிடம் பெற்றார். அமெரிக்காவின் மோஸி, ஆடவர் 100 மீட்டர் தவளை பாணி போட்டியில், முதலிடம் பெற்றார். மகளிர் 400 மீட்டர் சுதந்திரப் பாணி போட்டியிலும், ஆடவர் 1500 மீட்டர் சுதந்திரப் பாணி போட்டியிலும், ருமேனியா தங்கப்பதக்கம் பெற்றது. ஜெர்மனி, பிரான்சு, தென் ஆப்பிரிக்கா, கனடா, ஆஸ்திரியா, ஸ்லோவாக், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், தலா ஒரு தங்கப்பதக்கம் வென்றன. மாஸ்கோவில் நிறைவுற்ற ிதே போட்டியில், ஆடவர் 400 மீட்டர் கலப்பு பாணி போட்டியில், 15 வயதான சீன வீரர் லீயூ வெய் சியா 2 ஆம் இடம் பெற்றார். ஆடவர் 200 மீட்டர் கலப்பு பாணி போட்டியில், அவர் 2 நிமிடம் 0.19 வினாடியில், தங்கப்பதக்கத்தை வென்றார். மொத்தம் 34 போட்டிகளில், ரஷிய வீரர்களும், வீராங்கனையரும், 15 தங்கப்பதக்கங்களை வென்றனர். உகெரான் வீராங்கனை க்ரோக்செவா, மகளிர் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஆகிய கலப்பு பாணி போட்டிகளில் முதலிடம் பெற்றார். இத்தொடரின் அடுத்த கட்ட போட்டி, சனவரி 30, 31 ஆம் நாள் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி, பிப்ரவரி 6 ஆம் நாள் முதல், 8 ஆம் நாள் வரை, பிரேசில் நடைபெற உள்ளது.