கதார் மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி, மார்ச் 2 ஆம் நாள் துவங்கியது. சீனாவின் செங் சியெ, லீ திங், ஒற்றையர் பிரிவின் முதலாவது சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று முன்னேறியுள்ளனர். லீ திங், 2 : 1 என்ற ஆட்டக்கணக்கில், பெல்ஜியத்தின் காலோனைத் தோற்கடித்தார். அடுத்த சுற்று போட்டியில், அமெரிக்காவின் கப்ரியாடியை எதிர்த்து ஆட உள்ளார்.
செங் சியெ, 2 : 0 என்ற ஆட்டக்கணக்கில், ஜெர்மனியின் ஸ்ட்வானியைத் தோற்கடித்தார். மார்ச் 4 ஆம் நாள் நடைபெற்ற 2வது சுற்றுப் போட்டியில், 2 : 0 என்ற ஆட்டக்கணக்கில், செர்வீயாவின் சின்சிச்சியை அவர், தோற்கடித்தார்.
சீனாவின் சுன் தியன் தியன், வெனிசுவேலாவின் மரியாவிடம் தோல்வி கண்டார்.
|