|
 |
(GMT+08:00)
2004-03-11 19:55:51
|
அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு
cri
ஆசிய பசிபிக் பிரதேசப் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் அறிவியல் தொழில் நுட்பத் துறை அமைச்சர்களின் 4வது கூட்டம், மார்ச் 11 ஆம் நாள், நியூசிலாந்தில் துவங்கியது. இவ்வமைப்பில் இடம் பெறும் 21 உறுப்பினர்களிடையிலான அறிவியல் தொழில் நுட்பத் துறை ஒத்துழைப்பு இதில், முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
அறிவியல் தொழில் நுட்ப மற்றும் புதுமைமயமாக்க ஆற்றலை வலுப்படுத்தி, இப்பிரதேசத்தின் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவிப்பது என்பது, இக்கூட்டத்தின் தலைப்பாகும்.
இவ்வமைப்பின் செயலகத் தலைவர் மரியோ அர்தாஸா துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார். சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, ஆசிய பசிபிக் பிரதேசத்துக்கு ஏற்படுத்திய செல்வாக்கு, இப்பிரதேச அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கான புதிய கொள்கை ஆகியவற்றை கூட்டம் விவாதிக்க வேண்டும் என்று, அவர் கூறினார்.
ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்பது, ஆசிய பசிபிக் பிரதேச பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் நோக்கமாகும்.
|
|
|