• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-12 20:48:13    
பூப்பந்து

cri

சுவீடன் ஓபன் பூப்பந்து போட்டி, மார்ச் 7 ஆம் நாள் நிறைவுற்றது. ஐந்து தங்கப்பதக்கங்களில் நான்கினை, சீனா பெற்றுள்ளது. மகளிர் இரட்டையர் போட்டியில், சீனாவின் கோ லிங், ஹுவாங் ஸ்வெய் ஜோடி, முதலிடம் பெற்றது. ஆடவர் ஒற்றையர் போட்டியில், சீனாவின் லிம் தான், 2 : 0 என்ற ஆட்டக்கணக்கில் சீனாவின் பௌ சுவன் லையைத் தோற்கடித்து, முதலிடம் பெற்றார். மகளிர் ஒற்றையர் போட்டியில், சீனாவின் கோங் ரெய் நா, 2 : 0 என்ற ஆட்டக்கணக்கில் நெதர்லாந்து வீராங்கனை சாங் ஹெய் லியாங்கைத் தோற்கடித்து, முதலிடம் பெற்றார். கலப்பு இரட்டையர் போட்டியில், தென் கொரியாவின் கிம் துங் வென், லோ சிங் மின் ஜோடி, 2 : 0 என்ற ஆட்டக்கணக்கில் சீனாவின் சாங் சுன், கோ லிங் ஜோடியைத் தோற்கடித்து, முதலிடம் பெற்றது. பிரிட்டிஷ் ஓபன் பூப்பந்து போட்டி, மார்ச் 10 ஆம் நாள், துவங்கியது. முதல் நாள் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் போட்டியில், உலக சாம்பியனான சீனாவின் சியா சுவன் செ, 1 : 2 என்ற ஆட்டக்கணக்கில் வெல்ஸின் வோயனிடம், தோல்வி கண்டார். பௌ சுவன் லைய், 1 : 2 என்ற ஆட்டக்கணக்கில் இங்கிலாந்தின் காஃபர் இடம், தோல்வி கண்டார். 11 ஆம் நாள் நடைபெற்ற கலப்பு இரட்டையர் போட்டியில், சீன தைபெயின் சை சியா சின், செங் வென் சின் ஜோடி, 2 : 0 என்ற ஆட்டக்கணக்கில் சீனாவின் சாங் சுன், கோ லிங் ஜோடியைத் தோற்கடித்து, கால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. சீனாவின் சென் சி சுன், சுவௌ திங் திங் ஜோடி, கால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆடவர் ஒற்றையர் போட்டியில், சீனாவின் சென் ஹோங், 1 : 2 என்ற ஆட்டக்கணக்கில் டென்மார்க் வீரர் கேடரிடம், தோல்வி கண்டார்.

லிம் தான், 2 : 0 என்ற ஆட்டக்கணக்கில், சீன ஹாங்காங்கின் ஊ வெயைத் தோற்கடித்து, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். சீனாவின் சென் யூ, 2 : 0 என்ற ஆட்டக்கணக்கில் தென் கொரியாவின் லி ஹியன் யியைத் தோற்கடித்து, அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். மகளிர் ஒற்றையர் போட்டியில், சீனாவின் கோங் ரெய் நா, சியெ சிங் வான், சுவோ மி, சாங் நிங் ஆகிய நடல்வரும் காலிறுதிப் போட்டியில், நுழைந்துள்ளனர்.