பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, மிகவும் வெற்றிகரமானதாக விளங்கும் என்று, முன்னாள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் சமாரான்ச் கருத்து தெரிவித்தார். மார்ச் 10 ஆம் நாள், அவர் ஹாவானாவில் இதை தெரிவித்தார்.
பெய்ஜிங் மாநகர், வரலாற்று, பண்பாட்டு மாநகராகும். கடந்த சில ஆண்டுகளில், பெய்ஜிங், வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, ஒலிம்பிக் வரலாற்றில், இதுவரை கானாத மிகவும் வெற்றிகரமான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பெய்ஜிங் மாநகரில், நடைபெறுவது உறுதி என்றார், அவர்.
|