• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-12 20:48:13    
தடகளப் போட்டி

cri

10 வது உலக உள்ளரங்க தடகள சாம்பியன் பட்டப் போட்டி, மார்ச் 7 ஆம் நாள், புடாபெஸ்டில் நிறைவுற்றது. ரஷியா, 8 தங்கப்பதக்கங்களுடன், முதலிடம் பெற்றது. அமெரிக்கா, 4 தங்கப்பதக்கங்களுடன், 2 ஆம் இடம் பெற்றது. சுவீடனும், எடியோப்பியாவும், தலா 2 தங்கப்பதக்கங்களைத் திரட்டி, 3 ஆம் இடத்தில் உள்ளன. 400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டப் போட்டியில், ரஷிய அணி, 3 நிமிடம் 23.88 வினாடியில், முதலிடம் பெற்று, உலக சாதனையை முறியடித்தது. மகளிர் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில், மொசாம்பிக்கின் 32 வயது மரியா மூடோலா, 1 நிமிடம் 58.50 வினாடியில், தூரத்தை ஓடி முடித்து, 6 ஆவது முறையாக, சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் 60 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில், கனடாவின் பாதிடாஃபிரிசியான், 7.75 வினாடியில், முதலிடம் பெற்றார். ஆடவர் 60 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில், அமெரிக்காவின் ஏலேன் ஜோனர்சன், தங்கப்பதக்கம் வென்றார். சீனாவின் லீயூ சியாங், 7.43 வினாடியில், வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.