தற்போது, சுற்றுலாத் துறை, யூன் நான் மாநிலத்தின் பசுமைப் பொருளாதாரத்தில், முக்கிய பகுதியாகும் என்று, பாங் சி சுன் கூறினார். அதன் சுற்றுலாத் துறையில், மேலும் அதிகமான பயண வகைகள் காணப்படுகின்றன. இதனால், யூன் நான் மாநிலத்தின் பசுமைப் பொருளாதாரம் மற்றும் தொடரவல்ல வளர்ச்சி நெடுநோக்குடன், சுற்றுலாத் துறையின் தகுநிலை மேலும் உயரும் என்றார் அவர்.
பசுமைப் பொருளாதார வளர்ச்சி--தொடரவல்ல வளர்ச்சி உறவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து, யூன் நான் மாநிலம் ஆழமாக ஆராய்ந்துள்ளது.
பசுமைப் பொருளாதாரமும், தொடரவல்ல வளர்ச்சியும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். தொடரவல்ல வளர்ச்சியின்றி, பசுமைப் பொருளாதாரம் இல்லை. பசுமைப் பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்யும் போது, தொடரவல்ல வளர்ச்சிப் பாதையில் நடைபெற வேண்டும் என்று, அவர் கூறினார்.
இதற்கான அறிவியல் தொழில் நுட்பத்தின் பங்கினை, யூன் நான் மாநிலம் அதிகரித்துள்ளது. பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்கும் போக்கில், இயற்கைச் சூழல், சுற்றுச் சூழல், பொருளாதார வளம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு, அறிவியல் தொழில் நுட்பத்தின் ஆதரவு மற்றும் வழிகாட்டல் பங்கு தேவை என்று, யூன் நான் மாநில வளர்ச்சி திட்ட குழுவின் உயர் அறிவியல் தொழில் நுட்பத் துறையின் தலைவர் ஊஃபென் தெரிவித்தார்.
முதலில், உயரிய மற்றும் புதிய அறிவியல் தொழில் நுட்பம் மூலம், தற்போதைய அறிவியல் தொழில் நுட்ப நிலையை, உயர்த்த வேண்டும். வளத்தைப் பாதுகாக்க வேண்டும். தொழில் துறையின் தொடரவல்ல வளர்ச்சியைப் பாதுகாக்க வேண்டும் என்று, ஊஃபென் கூறினார். 1 2 3 4
|