• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-04-13 09:06:22    
மங்கோலிய இன பாடகி ககென் சி முக அம்மையார்

cri
1960ல் உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் ஒசினா லீகில் ககென் சி முக பிறந்தார். அவருடைய தாயார் ஒரு மருத்துவர். தகப்பனார் ஒரு தொல்பொருள் ஆய்வாளர். அவருக்கு 4 சகோதர சகோதாரியர் உள்ளனர். இவர்கள் அனைவரும் நடனமாடுவதிலும் பாட்டு பாடுவதிலும் தேர்ச்சி பெற்றவர். குடும்பத்தினர் குடும்ப இசை விழாவை நடத்துவது வழக்கம். இத்தகைய சூழ்நிலை காரணமாக, சிறு வயதிலிருந்தே, பாட்டு பாடுவதை அவர் மிகுதியும் விரும்பினார். குழந்தையாகவிருந்த போது, என் தந்தை எங்களுக்கு ஒரு சிறிய வானொலி பெட்டியை வாங்கித் தந்தார். இதிலிருந்து வந்த பாட்டு மிகவும் அருமையானது. சில சமயம் பாட்டு முடிவதற்குள் நான் வானொலி பெட்டியை நிறுத்திவிடுவேன். மீண்டும் அதைத் திறக்கும் போது, தொடர்ந்து பாட்டு வரும் என நினைத்தேன். ஆனால் மீண்டும் கேட்க முடியவில்லை. இதனால் பாட்டு பாடுவதில் பேரார்வம் காட்டினேன் என்று அவர் கூறினார். 1975ல் அவருடைய அண்ணன் உள் மங்கோலிய இசை நடன குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி இந்நற்செய்தியைக் கொண்டாடினர். மங்கோலிய இன மக்களின் பழக்கவழக்கங்களுக்கேற்ப விருந்தில் கலந்து கொண்ட குழந்தைகள் மது அருந்தி பாட்டு பாட வேண்டும். ககென் சி முக முறை வந்த போது அவருடைய கணீரென்ற பாட்டொலி அங்குள்ள இசையமைப்பாளர் மெய்லி சிக முதியோரை நெகிழச்செய்தது. பிரமாதம். அவர் ஒரு பிறவிப்பாடகி என்று இம்முதியோர் கூறினார். அவருடைய வழிகாட்டலில் ககென் சி முக பெய்ஜிங் மத்திய தேசிய இன இசை நடனக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 16. இசை தத்துவம் பற்றி படித்த பின், அவர் பாடும் மங்கோலிய நீண்ட ராக பாணி பாடல் நுட்பம், விரைவாக உயர்ந்துள்ளது. அத்துடன் அவர் மேடையில் ஏறி பாடலானார். அவருடைய பாடலில் புல்வெளி மணம் கமழ்கின்றது. இதனால் பார்வையாளரின் உளமார்ந்த வரவேற்பை அவர் பெற்றார். கடந்த 20 ஆண்டுகளாக அவர் சீனாவின் எல்லா இடங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் சென்று கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 1992ல் நாட்டின் பண்பாட்டுத் தூதர் என்ற முறையில் அவர் மங்கோலிய மக்கள் குடியரசில் பயணம் மேற்கொண்டார். சிறப்பு விருந்தினர் என்ற முறையில் மங்கோலியாவின் சர்வதேசக் கலை விழாவில் கலந்து கொண்டார். இதன் மூலம் மங்கோலிய இனத்தின் இசையை மேலும் ஆழமாக அறிந்து கொண்டேன். அவர்களுடைய பாட்டை எங்கள் பாட்டுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதன் மூலம், என் கலைப் பாதை மேலும் செழிப்பாகும். இதன் மூலம் நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். மங்கோலிய இன இசையில் பல அம்சங்கள் இடம்பெறுகின்றன. இரு நாட்டுக் கலைஞர்கள் பரிமாற்றத்தின் மூலம் பலவற்றைக் கற்றுக்கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார். 1993ஆம் ஆண்டு துவக்கம், சீனக் கலைஞர் குழுவின் உறுப்பினர் என்ற வகையில் அவர் பன்முறை ஜப்பானுக்குச் சென்றார். கடந்த 10 ஆண்டுகளில் ஜப்பானில் ஏறக்குறைய 500 இசை விழாவை அவர் நடத்தினார். ஜப்பானிய மக்களின் பாராட்டைப் பெற்றார். 1996ல், புல்வெளியின் காற்று எனும் அவருடைய முதலாவது தனிப்பட்ட இசைத்தட்டு வெளியானது. ககென் சி முக இளம் வயதிலிருந்து தமது ஊரை விட்டு வெளியேறியதியால், அவர் தமது ஊரை பற்றி அடிக்கடி நினைப்பதுண்டு. ஊர் எப்போதும் அழகானது. வேலை அதிகம் என்பதால், அடிக்கடி வீடு திரும்ப முடியவில்லை. எனவே காட்டு வாத்து எனும் பாடலைப் பாடிய போது சற்றே கவலை உணர்வுடன் பாடினேன் என்றார் அவர். காட்டு வாத்து என்பது, எனக்கு மிகவும் பிடித்தமான பாடலாகும். தொலைவிலுள்ள நண்பரை என் வீட்டுக்கு வரவேற்கிறேன். அனைவரும் அருமையான வாழ்க்கையை ஆசை தீர அனுபவிக்கிறோம் என்று இப்பாடல் குறிபிடுகிறது என்றார் அவர். அவர் ஒரு தலைசிறந்த பாடகி, தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் நடத்துகிறார். சில திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.