• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-04-13 09:07:46    
சுற்றுலாவின் கவனிக்கத் தக்கவை

cri
பொதுவாக சுற்றுலா மேற்கொள்ளும் போது சாக்லெட், பழகம் இனிப்பு மிட்டாய் போன்ற சில பொருட்கள் நம்மிடம் இருக்க வேண்டும். வழியில் எதோ பிரச்சினை காலையில் சிற்றுண்டி சாப்பிட நேரம் கிடைக்காதது. அல்லது மிக குறைவாக உண்டது, வழியில் களைப்பு , மதிய உணவுக்கான நேரம் ஆகாத நிலையில் பசி, ஏற்படுவது களைப்பு உண்டாவது போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அப்போது சில இனிப்பு மிட்டாய்களை உட்கொண்டால் 10 அல்லது 15 நிமிடத்தில் உடல் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். அதற்கிடையில் வசதிப்பட்டால் ஒரு கோப்பை குளம்பி அதாவது காபி பழச்சாறு அருந்தலாம். நம்மிடம் இனிப்பு மிட்டாய் இல்லை என்றால் இனிப்பு பழச்சாறு அருந்தினால் அல்லது மற்ற உணவுப் பொருளை உட்கொண்டால் உடல் இயல்பு நிலைக்குத் திரும்பும். ஆனால் சற்று கூடுதல் நேரம் பிடிக்கும். இரத்தத்தில் சர்க்கரை குறைவு காரணமாக மயக்கம் ஏப்பட்டால் உடனடியாகப் படுக்க வைக்க வேண்டும். ஆடைகளைத் தளர்ற்த வேண்டும். இனிப்புத் தண்ணீர் அல்லது பழச்சாறு தர வேண்டும். அதன் பின்பும் அதே நிலையில் இருந்தால் தாமதமின்றி மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும். சுற்றுலாவின் போது பெருமளவில் வியர்வை வெளியேறினால குடிநீரில் சற்றே உப்பு சேர்ந்து அருந்த வேண்டும். இது உடலில் ஏற்பட்ட உப்பு பற்றாக்குறையை ஈடுசெய்யும். சுற்றுலாவின் போது உப்பு கொண்டு செல்வதில் இன்னொரு பயனும் உண்டு. வியர்வைத் துடைக்க பயன்படுத்திய துணியை உப்பைப் பயன்படுத்தி தேய்த்து நீரில் அலசினால் துணி மென்மையாகவும் தூய்மையாகவும் மாறும். சுற்றுலா முடிந்து வீட்டுக்குத் திரும்பிய பின், மிதமான வெந்நீரில் வெதவெதப்பான நீரில் சற்றே உப்பு சேர்ந்து குளிக்க வேண்டும். இதனால் சுற்றுலாவினால் ஏற்பட்ட களைப்பு விரைவில் நீங்கிவிடும். உடலின் தோலும் மென்மையாகலாம். புத்துணர்ச்சியும் ஏற்பட வாய்ப்புண்டு. களைப்பை நீக்கும் வைட்டமின் சி மனித உடம்பில் வைட்டமின் குறையும் போது களைப்பு ஏற்படுகின்றது. அப்போது வைட்டமின் சி உடனடியாக தேவைப்படுகின்றது. பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், கோலிபோஃலாகுவா, பாகற்காய், கீளை, ஸ்ட்ராபெரி பழம் போன்றவற்றில வைட்டமின் சி நிறைய உண்டு. இவற்றை நாம் உட்கொள்வது நல்லது. தவிர, நாள்தோறும் காலையில் பால் அல்லது வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழச் சாறு அருந்தினால், உடலின் நோய்த் தடுப்பு ஆற்றல் அதிகரிக்கும். முதுமைமயமாக்கம் தடுக்கப்படலாம். 5 நிமிடம் பூவின் வாசணையை நுகர்ந்தால் களைப்பு நீங்கிவிடும்.