• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-04-13 09:08:30    
குழந்தைக்கான காலணிகள்

cri
வணக்கம் நேயர்களே. இன்றைய நிகழ்ச்சியில் காலணிகளின் பயன்பாடு பற்றி தொடர்ந்து கூறுகின்றோம். தொகுத்து வழங்குபவர் தி. கலையரசி 1. குழந்தைக்கான சிறப்புக் காலணி குழந்தைக்கு ஏற்ற காலணிக வாங்குவது என்பது பெற்றோருக்குப் பிரச்சினையாகும். இப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அமெரிக்கக் கூட்டு நிறுவனம் ஒரு வகை, குழந்தைக் காலணியை தயாரித்துள்ளது. காலணியின் அடிப் பகுதி வெளியே தெளிவாக காணப்படுகின்றது. ஆகவே குழந்தைகள் காலணியை பாதங்களில் அணிந்தவுடன் அளவு சரியா இல்லையா எனத் தெளிவாகத் தெரிந்துவிடுகின்றது. .............இசை.................. 2. பார்வையற்றோருக்கான சிறப்புத் தோல் காலணி அமெரிக்கா இதைத் தயாரித்துள்ளது. இதன் மேற் பகுதியில் சிவப்புக் கதிர் உடைய உணர்ச்சியூட்டும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மனிதர் 1 மீட்டர் அப்பாலுள்ள பொருளை உணர அது உதவுகின்றது. தடைப் பொருட்களின் அளவுக்கு ஏற்ப காலணி எச்சரிக்கை விடுக்கும். எளிய பயிற்சிக்கு தடைப் பொருட்களைத் தவிர்த்து நடந்து செல்ல பார்வையற்றோருக்கு இது உதவுகின்றது. ...........இசை................ 3. எச்சரிக்கை விடுக்கும் காலணி எச்சரிக்கை விடுக்கும் காலணி இத்தாலியில் அறிமுகப்படுத்தப்படுகின்றது. வங்கிப் பணியாளர் இதன் மூலம் பயன்பெறலாம். கொள்ளைக்காரர் வங்கியில் கொள்ளையடிக்கும் போது பணியாளரின் ஒரு காலணி மற்ற காலணியுடன் தொடர்பு கொண்டதும் அவற்றில் பொருத்தப்பட்ட மினி ரேடியோ ஊடனுப்பி வெளியே அறிகுறியை ஏற்படுத்தும். தொலைதூரத்திலுள்ள எச்சரிக்கை கருவி ஒலிக்கும். இந்த காலணிகள் நாணய வாரியங்கள், நிதி நிறுவனம், நகைக் கடை, பொருட்காட்சியகம், கிடங்கு ஆகியவற்றில் பணிபுரிவோருக்கு ஏற்ற வகை காலணி இது. நேயர்கள் இதுவரை பயன்தரும் காலணி பற்றிக் கேட்டீர்கள். இத்துடன் நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது.