• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-04-20 17:42:42    
தேசிய மக்கள் பேரவை நிரந்தர உறுப்பினர் வு ரி து

cri
சீனாவின் உச்ச அதிகார நிறுவனமான தேசிய மக்கள் பேரவை நிரந்தரக்கமிட்டியில், மொத்தம் 170 உறுப்பினர் உள்ளனர். இளமை, சிறப்புத்துறை அறிவு ஆகியவை, அவர்களின் தனித்துவமாகும். அவர்கள், அரசாங்க வாரியத்தின் தலைவர், அல்லது அறிவியல் துறையின் நிபுணர் ஆவர். மங்கோலிய இனத்து மக்கள் பேரவைப் பிரதிநிதி வு ரி து, அவர்களில் ஒருவராவார். அவருக்கு வயது 48. நிரந்தரக்கமிட்டியில் இடம்பெறுவதற்கு முன், சீன உழைப்பு மற்றும் சமூக காப்பீட்டு அமைச்சகத்தில் அதிகாரியாக இருந்தார். 5 ஆண்டுப் பதவிக்காலத்தில், உழைப்பு, மகப்பேறு உள்ளிட்ட, சமூக காப்பீடு தொடர்பான கொள்கைகள் பலவற்றின் உருவாக்கம், நடைமுறையாக்கம் ஆகியவற்றை அவர் முன்னேற்றுவித்துள்ளார். இதனால், தேசிய மக்கள் பேரவை நிரந்தரக்கமிட்டியில், நிதி பொருளாதாரத்துறையின், சிறப்புக் கடப்பாடுடைய உறுப்பினர்களில் ஒருவராக அவர் இடம்பெற்றுள்ளார். தொடர்புடைய சட்டத்தின் சட்டமியற்றல், கண்காணிப்பு, பரிசீலனை முதலிய பணிக்குப் பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஓராண்டில், 12 சட்டங்களையும் சட்டப்பிரச்சினை பற்றிய வரைவுத் தீர்மானங்களையும் நிரந்தரக்கமிட்டி பரிசீலனை செய்துள்ளது. நிர்வாக அனுமதிச் சட்டம் குடி மக்கள் அடையாள அட்டைச் சட்டம் போன்ற சட்டங்களுக்கான பரிசீலனையில் பங்கெடுத்தேன். அன்றி, வங்கித் தொழில் மீதான கண்காணிப்பு மற்றும் நிர்வாகச் சட்டம் சமூகக் காப்பீட்டுச் சட்டம் ஆகிய, நாணய, பொருளாதாரத் துறைகளுடன் தொடர்புடைய சட்டங்களை இயற்றி வகுப்பதிலும் கலந்து கொண்டேன். வட கிழக்கு, தென் மேற்குச் சீனாவுக்குச் சென்று, கட்டிடச்சட்டம், பாதை பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து சட்டங்களின் நடைமுறையாக்கத்தையும் சரிபார்த்தேன் என, கடந்த ஓராண்டுப் பணி பற்றி அவர் கூறினார். அரசாங்க வாரியப் பணியிலிருந்து நிரந்தரக்கமிட்டியின் பணி பெரிதும் வேறுபட்டு விளங்குவதாக அவர் கருதுகின்றார். அரசாங்க வாரியத்தில், அரசு மருத்துவக் காப்புறுதி, தொழில் விபத்துக்கான காப்புறுதி, மகப்பேறு காப்புறுதி ஆகிய மூன்று சமூக காப்புறுதிக் கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்துவது, எனது முக்கிய கடப்பாடாகும். தேசிய மக்கள் பேரவையில் எனது பணி, சில முக்கிய பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது என்றார் வு ரி து. முனைவர் பட்டம் பெற்ற அவர், பெய்சிங்கில் பணி புரிய வருவதற்கு முன், விவசாயியாக இருந்தார். மேற்கு சீனாவின் ஒரு பல்கலைக்கழகத்தின் உலோகவியல் துறையில் பட்டம் பெற்ற பின், ஓராண்டு தொழிலாளியாகப் பணி புரிந்தார். பின்னர், உள்மங்கோலியப் பல்கலைக்கழகத்தில், உலோகவியல் வேதியியல் ஆராய்ச்சி மாணவரானார். பட்டம் பெற்ற பின்பு, தமது ஊரிலுள்ள ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டு ஆசிரியராகப் பணி புரிந்தார். இதற்கிடையில், சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்ததினால், சீனப் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடையலாயிற்று. வெளிநாடுகளுடனான பரிமாற்றம், நாளுக்குநாள் அதிகரித்தது. அரசு விவகாரங்களில் அக்கறையும் படிப்பில் ஆர்வமுமிக்க அவர், பொருளாதார நிர்வாக இயல் மீது கவனம் செலுத்தலானார். 1992ம் ஆண்டு, அவருடைய வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது. அப்போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு முக்கிய கூட்டத்தில் சோஷலிச சந்தைப் பொருளாதார அமைப்புமுறையின் உருவாக்கம் பற்றிய தீர்மானம் உறுதிப்படுத்தப்பட்டது. இத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன், பெய்சிங்கிற்கு அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். சமூக காப்பீட்டு முறைமையின் உள்ளடக்கத்தை இயற்றுவதில் ஈடுபட்டார். பின்னர், இத்துறையின் மூத்த பிரமுகர் என்ற முறையில், அதிகாரியாக நியமிக்கப்பட்டு, இக்கொள்கையை வகுப்பவராகவும் நடைமுறைப்படுத்துபவராகவும் மாறினார். வேலை வாய்ப்பு, சமூக காப்பீடு ஆகியவற்றில், அரசு தற்போது சிறப்புக் கவனம் செலுத்துகின்றது. சமூக காப்பீடு பற்றிய சட்டமியற்றல், 2003-2008 சட்டமியற்றல் திட்டத்தில் பத்தாவது தேசிய மக்கள் பேரவை சேர்த்துள்ளது. தற்போது, சமூக காப்புறுதி சட்டத்தை வரையும் பணிக்கு அவர் பொறுப்பேற்றுள்ளார். இப்பொழுது, பொருளாதாரமும் சமூகமும் விரைவாக வளர்ந்து வருகின்றன. முந்திய அறிவு, பணி அனுபவம் ஆகியவற்றை மட்டும் சார்ந்து, நாளுக்குநாள் வளரும் நிலைமைக்கு ஏற்ப பணிபுரிவது சிரமம். சட்டக் கல்வியும் பயில விரும்புகின்றேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம், பல்கலைக் கழகத்துக்குச் சென்று பாடம் கேட்கின்றேன் என்றார் அவர். உள்மங்கோலிய தன்னாட்சிப்பிரதேசம், அவரது ஊராகும். விழா நாட்களிலோ விடுமுறை நாட்களிலோ, தமது மனைவி, மகளுடன் அங்குச் சென்று, உள்ளூர் மக்களைச் சந்தித்துரையாடுகிறார். அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிகிறார்.