• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-04-26 10:34:05    
ஹார்பின் நகரம்

cri
ஹார்பின் நகரம் தெய்யாங் தீவு, ஹார்பின் நகரில் அமைந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, இத்தீவின் எழில் மிக்க காட்சி, சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்த்துவருகின்றது. சீனாவின் வட கிழக்கில் அமைந்துள்ள ஹெய்லுங்சியாங் மாநிலத்தின் தலைநகரம் ஹார்பின். இது, ரஷியாவை ஒட்டி அமைந்துள்ளது. எனவே ரஷிய மணம் கமழ்கின்றது. சீனாவை அன்னப் பறவையாக வர்ணித்தால், அதன் கழுத்தில் ஒளிவீசும் முத்து என, ஹார்பின் நகரை அழைக்கலாம். வேறுபட்ட பண்பாடுகளின் கலவை காரணமாக, சீனாவின் இதர பல நகரங்களிலிருந்து ஹார்பின் வேறுபடுகின்றது. ஹார்பின் நகரில், வேறுபட்ட பாணிகளில் கட்டியமைக்கப்பட்ட மேலை நாட்டுக் கட்டடங்கள் உண்டு. சீனப் பாணிக் கட்டடங்களும் உண்டு. எனவே, சீன மற்றும் மேலை நாட்டுக் கட்டிடக் கலை ஒன்றிணையும் தனிச்சிறப்பை இங்கு உணரலாம் என்று இந்நகரில் பணி புரிந்துவரும் யௌ ச்சியெ பிங் என்பவர் கூறினார். இந்நகரில், புனித சோபியா தேவாலயம், கண்டுகளிக்கத் தக்கது. 1907ல் இது கட்டப்பட்டது. ஹார்பின் மற்றும் தூரக் கிழக்குப் பிரதேசத்தில், அளவில் பெரியது இது. இதற்கு முன்புறம் அமைந்துள்ள மத்திய வீதியானது, ஹார்பின் நகரில் புகழ்பெற்ற வணிக வீதிகளில் ஒன்றாகும். மத்திய வீதி, 100 ஆண்டு வரலாறுடையது. 1898ல் அமைக்கப்பட்ட இவ்வீதி, சீன வீதி என்று அழைக்கப்பட்டது. 1925ல், மத்திய வீதி என அதன் பெயர் மாற்றப்பட்டது. வீதி நெடுகிலும், ஐரோப்பிய பாணியிலான 71 கட்டிடங்கள் உள்ளன. அவற்றில், 1903 முதல் 1927 வரை கட்டப்பட்டவை. தனிச்சிறப்பியல்பு வாய்ந்தவை என்று இவ்வீதியின் நிர்வாகப் பணியகத் தலைவர் லியூ துங் பிங் கூறினார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், இந்தப் பரபரப்பான வீதியில், ரஷியாவின் தோல், பிரான்சின் வாசனைத் திரவியம், ஜெர்மனியின் மருந்து வகை, அமெரிக்காவின் நிலக்கரி எண்ணெய், சுவிட்சர்லாந்தின் கைக்கடிகாரம் ஆகியவை விற்பனையாயின. அன்றி, ரஷியா, பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் விட்டுச்சென்ற வேறுபட்ட பழக்க வழக்க அடையாளங்கள் காணப்படலாம். தற்போது இவ்வீதியில், உலகப் புகழ்பெற்ற ஆடை, நகை உள்ளிட்ட உயர் நிலை வணிகப் பொருட்கள் விற்பனையாகின்றன. பொருட்களின் சொர்க்கம் என்று இந்நகரைக் கூறலாம். ஹார்பின் நகரில், துவக்கக் காலத்திலேயே கட்டடங்களில் மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கையிலும் அந்நிய செல்வாக்கு தென்படுகின்றது. இந்நகரில், மரபுவழிப்பட்ட மேலை நாட்டு உணவகங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, 100 ஆண்டு வரலாறுடைய ஹுவாமெய் உணவகத்தில் பாரம்பரிய ரஷிய உணவைச் சுவைக்கலாம். ரஷிய உணவுப் பண்பாட்டினால், ஹார்பின் நகரில் இதற்கு வாய்ப்பு உண்டு என்கிறார் சூ சொ யாங். ஹார்பின் நகரில், மேலை நாட்டு உணவு வகையில், ரஷிய உணவின் சுவை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சீன-ரஷிய எல்லையில் ஹார்பின் அமைந்திருப்பது இதற்குக் காரணமாகும். கடந்த காலத்தில் ரஷிய நாட்டவர் அதிக அளவில் இங்கு வந்தனர். இதன் விளைவாக, அவர்களின் பழக்க வழக்கங்கள் இங்கு குடியேறின. மேலை நாட்டு உணவு வகையானது, இங்கு பண்பாட்டுச் செல்வாக்கு பெற்றுள்ளது என்றார் அவர். மேலை நாட்டு உணவு வகை மட்டுமல்ல, ரஷிய உணவு வகையும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஹார்பின் மக்கள், லியெபா அதாவது ரஷிய ரொட்டி உட்கொள்ளவும், ரஷிய சூப் அருந்தவும் விரும்புகின்றனர். மேலை நாட்டு உணவு வகையானது, இங்குப் பண்பாட்டுச் செல்வாக்கு பெற்றுள்ளது என்றார் அவர். ஹார்பின் நகரின் 4 பருவ காலங்களில் கால நிலை பெரிதும் வேறுபடுகின்றது. குளிர் காலத்திலும் கோடை காலத்திலும் 60, 70 சென்டிகிரேட் வித்தியாசம் காணப்படலாம். இந்நகர வாழ் மக்கள், ஓராண்டில், பருவ காலத்துக்கு ஏற்ப, ஆடை வகைகளை மாற்ற வேண்டியுள்ளது. குளிர்காலத்தில், தோலாடை, பஞ்சாடை ஆகியவற்றையும், வசந்த காலத்தில், கம்பளி ஆடையையும் அணிய வேண்டியுள்ளது. கோடைகாலத்தில் பட்டுப்பாவாடையும், குறுகிய காற்சட்டையும் இலையுதிர் காலத்தில் காற்றுத் தடுப்பு ஆடையும் மேலை நாட்டு வடிவ ஆடை அணிகின்றனர். ஹர்பின் நகர், பாரம்பரிய, நாகரிகமுடைய நகராகும். ஆண்டுதோறும் அதிகமான பயணிகள் இந்நகருக்கு வருகை தருவதற்கும் இந்நகர வாழ்மக்கள் பலர் இங்கிருந்து வேறு இடத்தில் குடியேற விரும்பவில்லை என்பதற்கும் இதுவே காரணமாகும். ஹார்பின் நகர் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்நகரம் பற்றி, பல கதைகள் வழங்குகின்றன. இதர பிரதேசங்களைச் சேர்ந்த பலரும் இந்நகரை விரும்புவதாகவே நான் கருதுகின்றேன் என்று இந்நகரில் வசிக்க விரும்பும் கட்டடக்கலை நிபுணர் ஹுஹொங் கூறினார். ஹார்பின் நகர், ஈர்ப்புத் தன்மை வாய்ந்த நகர் என்பதை மறுப்பதற்கில்லை. நேயர்கள் இதுவரை, ஹார்பின் நகரம் பற்றி கேட்டீர்கள்.