|
 |
(GMT+08:00)
2004-04-26 10:34:05
|
 |
சார்ஸ் வாக்சீன்
cri
சார்ஸ் எனப்படும் மூச்சடைப்பு நோய்க்கு எதிராக, இன்று, உலகளவில், பத்து வாக்சீன் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இவை, பரிசோதனை ரீதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சி தீவிரமாக நடைபெற்றுவருகின்றது.
கனடாவும் அமெரிக்காவும் உருவாக்கியுள்ள 4 வாக்சீன, இவ்வாண்டிறுதியில் பயன்படுத்திப் பார்க்கப்படும்.
பிரான்சும் ஆஸ்திரியாவும் தயாரித்துள்ள வாக்சீன், அடுத்த ஆண்டில் பரிசோதிக்கப்படும். சீனாவில் இவ்வாண்டு சனவரியில், இந்த வாக்சீன் பயன்பாடு தொடங்கிவிட்டது. எனவே, இந்தப் போட்டியில், சீனா முன்னிலை வகிக்கின்றது.
சீனாவிலான சார்ஸ் வாக்சீன் பரிசோதனை 18 முதல் 40 வயதுக்குட்பட்ட 15 ஆண், 15 பெண்களிடையே மேற்கொள்ளப்படும். இது 3 தீங்கள் நீடிக்கும்.
விலங்குகளிடம் சோதித்துப் பார்த்த போது, இந்த வாக்சீன் பாதுகாப்பானது, பயன் மிக்கது என்று தெரியவந்தது.
செவ்வாய்க்கிரகத்தில் தண்ணீர்
செவ்வாயில் தண்ணீர் உண்டா? அங்கு உயிரினம் வாழ முடியுமா?
அறிவியலாளர் விடை காணத் துடித்த கேள்வி இவை. இப்போது, விடை கிடைத்திருக்கிறது.
செவ்வாய்க் கிரகத்தில், முன்பு தண்ணீர் இருந்திருக்கிறது. அதனால் அங்கு உயிர் வாழ்வதற்கான சூழல் உருவாகியிருக்கலாம் என்று தற்போது அறிவியலாளர் கூறுகின்றனர்.
இதற்கு, அடிப்படையாக அமைவது, நாஸா அனுப்பிய OPPORTUNITY, SPIRIT எனும் இரண்டு ரோபோக்கள் பூமிக்கு அனுப்பிவரும் தரவுகள்.
இத்தகைய சூழ்நிலை, எத்தனை காலம் நீடித்திருந்தது என்று தெரியவில்லை. ஆனால், தண்ணீரால் பாறை ஈரமாகியிருப்பது மட்டும் உறுதியாகத் தெரிகின்றது என்று, இந்த ரோபோவை இயக்கிவரும் அறிவியலாளர் கூறுகின்றனர்.
உயிர் வாழ்வதற்கு, செவ்வாய்க் கிரகத்தின் தரை ஏற்றதாக இருந்திருக்கக்கூடும் என்கிறார் கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸீவ் ஸ்கொயர்ஸ்.
இதன் காரணமாக, அங்கு உயிரினம் இருந்ததாகக் கூற முடியாது. அதைப் பற்றி எமக்கு எதுவும் இதுவரை தெரியவில்லை என்கிறார் அவர்.
ஆனால், OPPORTUNITY அனுப்பியிருக்கும் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால், ஏதோ ஒரு காலத்தில், பாறை, மண் ஆகியவற்றின் மீது தண்ணீர் படிந்திருப்பது தெரியவருகிறது. இது, எவ்வளவு காலம் நீடித்தது என்று தெரியவில்லை.
செவ்வாயிலிருந்து மாதிரிகளைக் கொண்டு வந்து, இங்குப் பரிசோதனைக்கூடத்தில் பரிசோதிக்கும் போதுதான் இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் உண்டா என்பதற்கான ஆதாரத்தைக் கண்டறிவதே, தற்போதைய அமெரிக்க ஆய்வின் நோக்கமாகும். இது, நிறைவேறியிருக்கின்றது என, நாஸா அறிவியலாளர் பெருமிதம் தொள்கின்றனர்.
EL CAPITAN எனும் படிவப் பாறையை மார்ச் 2 ஆம் நாளன்று OPPORTUNITY ரோபோ தீவிரமாக ஆராய்ந்தது அந்தப் பாறையை, இயன்ற அளவு தாக்கினோம். விளைவு-அங்கு தண்ணீர் இருந்ததற்கான வேதியியல்-புவியியல் தரவுகள் கிடைத்துள்ளன. என்று பெருமைப்படுகிறார் ஸ்கொயர்ஸ்.
அந்தப் பாறையை ரோபோ துளைத்த போது, பெருவாரியாக உப்பு படிவு கிடைத்தது. இத்தகைய படிவு எப்படி உருவாகிறது? இதை தண்ணீரில் கலந்து கரைத்து, தண்ணீர் ஆவியாகுமாறு செய்வதால் உருவாகிறது என்று அறிவியலாளர் பென்டன் C. கிளார்க் தெரிவிக்கிறார்.
செவ்வாயில், எவ்வளவு காலத்திற்கு முன்பு தண்ணீர் இருந்திருக்கலாம்? என்று வினா எழுப்பினால்—
நிழற்படங்களைப் பார்த்து, அதை தீர்மானிப்பது மிகவும் கடினம் என்கிறார். ஸ்கொயர்ஸ், தற்போது செவ்வாயில் செயல்படும் ஸ்பிரிட் OPPORTUNITY ஆகிய இரண்டு ரோபோக்களும் பூமிக்குத் திரும்பி வரப்போவதில்லை. செயல்படாமல் போகும்வரை அங்குத் தங்கியிருக்கும்.
EL CAPITAN உள்பட, சில பாறைகளை மேலும் ஆராய்வது என அறிவியலாளர் தீர்மானித்துள்ளனர். இதன் விளைவாக-செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் உருவான வரலாறு, செவ்வாய்க் கிரகத்தின் வரலாறு ஆகியவை உறுதிப்படுத்தப்படலாம், அல்லது வியத்தகு தகவல்களும் கிடைக்கலாம் என்கிறார் அறிவியலாளர் ஸ்டீவ் ஸ்கொயர்ஸ்.
பாம்பின் உண்வுப் பழக்கம்
பொதுவாக, விழுங்குவதற்கு ஏற்றதான இரையை பாம்புக் கவ்வி, விழுங்கிவிடும் என்று நாம் அறிந்திருக்கிறோம்.
இப்போது, ஒரு வகைப் பாம்பு, புதுமாதிரியாக இரையை உட்கொள்வதை ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர்.
வளைத்து இழுத்தல் என, அதற்குப் பெயரிட்டுள்ளனர்.
பெரிய அளவில் நண்டினை, இந்த வளைத்து இழுக்கும் முறை மூலம் அந்தப் பாம்பு உட்கொள்கிறதாம்.
சிங்கப்பூர் காடுகளில், இத்தகைய பாம்புகளையும் நண்டுகளையும் சேகரித்து, பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
இந்தப் புது மாதிரியான உணவு உண்ணும் பழக்கத்தை இரவு நேரத்தில், இருட்டறையில் INFRARED வீடியோ, கேமரா மூலம் பதிவு செய்தனர்.
வளைத்து இழுத்து உண்ணும் முறையை 85 விழுக்காடு பாம்பு பயன்படுத்தியது தெரியவந்தது.
இந்தச் சாதாரண பாம்பு, விதிமுறைகளைத் தகர்த்தெறிகிறது என்கிறார் ஹெரால்ட் வோரிஸ்.
நண்டின் உடம்பைத் தன் உடம்பால் ஒரு முனையில் வளைத்துப் பிடித்து, மறு முனையில், நண்டின் கால்களை வாயால் இழுத்து உண்கிறது இந்தப் பாம்பு.
ஒருவேளை, புதுமை விரும்பியோ இந்தப் பாம்பு!
மற்றுமோர் செந்நிறக் கிரகம்
சூரிய மண்டலத்தின் மிகவும் குளிச்சியான, நெடுந்தொலைவிலான பொருளை வானவியலாளர் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு, சேத்னா (SEDNA)என்று பெயரிட்டுள்ளனர்.
சூரியனிலிருந்து, 1300 கோடி கிலோமீட்டர் தொலைவில் இது காணப்படுகிறது. காலநிலை, பூச்சியத்துக்கும் கீழே 240 டிகிரி சென்டிகிரேட் செவ்வாய்க்கிரகத்துக்கு அடுத்தபடியாக, செந்நிறமாக விளங்குவது சேத்னா. சூரியனைச் சுற்றி வர, பத்தாயிரத்து ஐந்நூறு ஆண்டு எடுத்துக்கொள்கின்றது.
விண்வெளியில் மிக மெதுவாக நகர்வது சேத்னா, 40 நாட்களுக்கு ஒரு முறை சுழல்கிறது. என்றால், பார்த்துக்கொள்ளுங்கள். “சேத்னா என்பது, சூரிய மண்டலத்தின் ஒரு பகுதியாகும், ஆயினும், இதன் காரணமாக, அதைக் கிரகம் என்று குறிப்பிட இயலாது” என்கிறார். வானவியலாளர் பிரையன் மார்ஸ்டென்.
|
|
|