• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-04-26 10:34:05    
கலையரசி, தமிழ்ச் செல்வம்

cri
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 10வது தேசியக் கமிட்டியின் 2வது கூட்டத் தொடர் மார்ச் 3ம் நாள் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இரண்டு நாட்களுக்குப் பின் அதாவது மார்ச்சு 5ம் நாள் சீனாவின் 10வது தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத் தொடர் துவங்கவுள்ளது. சீனாவின் பல்வேறு நிலை மக்கள் அரசியல கலந்தாய்வு கமிட்டிகள் சீனாவில் சோஷலிச ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் முக்கிய வடிவமாகத் திகழ்கின்றன. அமைப்பு ரீதியில் பார்த்தால் மிகவும் பிரதிநிதித்துவம் வாய்ந்தது. முழுமையான விவாதம் கலந்தாய்வு ஆகியவற்றின் மூலம் வேவ்வேறான கட்சிகள், சிறுப்பான்மைத் தேசிய இனங்கள் மத நம்பிக்கை கொண்டோர் ஆகியோருக்குமிடையிலான கருத்துப்பரிமாற்றமும் புரிந்துணர்வும் அதிகரிக்கப்படும். பொது மக்களின் விவேகமும் அனுபவமும் கண்டறியப்படும். ஆளும் கட்சி, அரசு ஆகியவை மேற்கொண்டுள்ள கொள்கைத் தீர்மானம் மேலும் ஜனநாயகமயமாக்கப்படும். அறிவியல்மயமாக்கப்படும். இதன் மூலம் அரசியலில் அரசின் முழுமையான பணிக்கு மிகப் பரந்தளவிலான ஜனநாயக அடிப்படை ஆதரவு வழங்கப்படும். மார்ச் 3ம் நாள் துவங்கியுள்ள சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 2வது கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தலாமே. கூட்டத் தொடரில் மாநாட்டின் சாசனம் திருத்தப்படும். அதேவேளையில் மாநாட்டு உறுப்பினர்கள் சீனத் தேசிய மக்கள் பேரவை கூட்டத் தொடரில் பார்வையாளர் என்ற முறையில் கலந்து கொள்வர். தலைமை அமைச்சர் வென்சியாபாவ் வழங்கும் அரசு பணியறிக்கையையும் அரசு திட்டம், நிதி முதலியவை பற்றிய அறிக்கைகளையும் அவர்கள் கேட்டறிந்து விவாதிப்பர். பின் சீனாவின் முக்கிய கொள்கைகள் கோட்பாடுகள், பொது அக்கறை வாய்ந்த பிரச்சினைகள் ஆகியவை பற்றி தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைப்பர். அரசின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கான முன்மொழிவுகளையும் தெரிவிப்பர். சாசன திருத்தம் பற்றி விளக்கமாக கூறுங்களேன். இது பற்றி 10வது தேசியக் கமிட்டியின் நிரந்தரக் கமிட்டி உறுப்பினரும் மாநாட்டின் வெளிவிவகாரக் கமிட்டித் துணைத் தலைவருமான சான்கோசியான் 2ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். “3 பிரதிநிதித்துவம்”என்ற சிந்தனையையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 16வது தேசிய மாநாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட முக்கிய தத்துவம், கோட்பாடுகள் கொள்கைகள் ஆகியவற்றையும் மாநாட்டின் சாசனத்தில் சேர்க்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நிலை மக்கள் அரசியல் கலந்தாய்வுக் கமிட்டிகள் நடைமுறையில் பெற்றுள்ள அனுபவங்களை இதில் பதிவு செய்ய வேண்டும். மாநாடு நிறைவேற்றும் கடப்பாடு தொடர்பான அமைப்பு முறை, ஒழுங்குமுறை ஆகியவை மேலும் முழுமையாக்கப்பட்டு வரையறைப்படுத்தப்பட வேண்டும். இவையனைத்தும் சாசனத்தில் சேர்க்கப்பட வேண்டும். அடுத்து, உறுப்பினர்கள் கருத்துருக்களை முன்வைப்பது பற்றி சுருக்கமாக கூற இயலுமா? உறுப்பினர்கள்,அரசு விவகாJங்கள் பற்றி விவாதித்து, முன்மொழிவை முன்வைத்து, ஜனநாயக கண்காணிப்பை மேற்கொள்ளும் முக்கிய வடிவமாக அது விளங்குகின்றது. அத்துடன், சமூக நிலைமையையும் மக்களின் விருப்பத்தையும் அறிந்து, தெரிவிப்பதற்கான முக்கிய வழிமுறையும் ஆகும். சீனாவின் 8 ஜனநாயக கட்சிகளில் ஒன்றான சீன ஜனநாயக லீக் மத்தியக் கமிட்டியின் நிரந்தர உறுப்பினர் தாங் கேமே அம்மையார் வருமாறு கூறிகின்றார். அரசியல் கலந்தாய்வு மாநாடானது, அரசு விவகாரங்களில் பங்கு கொண்டு, அவை பற்றி விவாதிக்கும் முக்கிய அரங்கமாகும். கருத்துருவை முன்வைப்பதற்கு முன், விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு ஏற்ப, நாங்கள் சில சிறப்புக் கமிட்டிகளாகப் பிரிந்து செயல்படுவோம். ஆண்டுதோறும், சார்ந்துள்ள துறையின் படி, விவாதிக்க வேண்டிய பிரச்சினைகளைத் தேர்ந்தெடுக்கின்றோம். ஜனநாயகக் கட்சிகள், கள ஆய்வு மூலம், ஏராளமான தரவுகளைக் கொண்டு, முடிவை நிறைவேற்றி, அறிக்கை தயாரித்து, இறுதியில் கருத்துருவை உருவாக்குகின்றோம். கொள்கை உருவாக்கம் பற்றிய பல ஆக்கப்பூர்வ முன்மொழிவுகளும், சீர்கேடு உள்ளிட்ட செயலற்ற நிலைமை மீதான விமர்சனமும், கண்காணிப்பும் அவற்றில் இடம்பெறுகின்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி, அவற்றில் மிகவும் கவனம் செலுத்தி, உரிய முறையில் கையாளும் வகையில் தொடர்புடைய அரசு வாரியங்களுக்கு அவற்றை அனுப்புகின்றது என்றார் அவர். இவ்வாண்டு உறுப்பினர்கள் பெரிதும் கவனம் செலுத்தும் பிரச்சினைகள் யாவை? இது தொடர்பாக, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டியின் நிரந்தர உறுப்பினர் சாங் கோசியாங் வருமாறு கூறுகின்றார். நாட்டின் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சியில் நிலவும் சில முக்கிய பிரச்சினைகள் குறிப்பாக, ஓரளவு வசதி படைத்த சமூகத்தை உருவாக்கி, சீனத் தனிச்சிறப்பியல்புடைய சோஷலிசத்தின் புதிய நிலைமையை உருவாக்குவதில், தீர்க்கப்பட வேண்டிய சில முக்கிய பிரச்சினைகள் உறுப்பினர்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளன என்றார் அவர். சீன அரசியல் அமைப்புச் சட்டத்தையும் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு சாசனத்தையும் திருத்துவது, கிராமப்புறப் பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்து, விவாசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, பொது உடைமைமுறையற்ற பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவது ஆகியவை முக்கிய இடம்பெறுகின்றன என்றார் சாங் கோசியாங். இனிவரும் நிகழ்ச்சிகளில் இவற்றை விவரமாக அறிமுகப்படுத்துவோம்.