• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-04-26 10:34:05    
புயி இன கிராமம்

cri
சீனாவின் தென்மேற்கில், குய்சோ மாநிலம் அமைந்துள்ளது. அங்கு, ஆன்லொங் மாவட்டத்தில், தாத்தாங் எனும் புயி இனக் கிராமம் உள்ளது. ஆயிரம் பேரைக் கொண்ட 220 குடும்பங்கள் மட்டுமே, இங்கு வாழ்கின்றன. தேசிய இன மணம் கமழும் பழக்கவழக்கங்கள், மக்களை மாண்புறச்செய்கின்றன. சீனாவின் 56 தேசிய இனங்களில் புயி இனமும் ஒன்று. கையால் ஆடை நெய்வதற்குப் பெயர் பெற்ற இனம். இவ்வின மக்களின் ஆடை, பொதுவாக நீலம் மற்றும் கறுப்பு நிறத்தில் உள்ளன. அவற்றின் மேல், நேர்த்தியான வரைபடங்கள் பல உண்டு. பெரும்பாலான புயி இன நங்கையர், 10 வயதிலிருந்தே நெய்தல் மற்றும் சாயந்தோய்த்தலைக் கைத்தொழிலைக் கற்கின்றனர். இவர்கள் மெழுகு அச்சடிப்பு நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர். வெள்ளைத் துணியில், மலர், செடிகொடி, பறவை, விலங்கு, மீன், விண் மீன், சந்திரன் போன்றவற்றை இதன் மூலம் அச்சடிக்கின்றனர். வரைபடங்கள் நேர்த்தியாகவும் தெள்ளத்தெளிவாகவும் இருப்பதுடன், சாயந்தோய்த்தல் நுட்பமும் தலைசிறந்து விளங்குகின்றது. ஓங் தியன் யி எனும் அறிவிப்பாளரைச் சந்தித்து உரையாடினோம். 1977ஆம் ஆண்டு, ஒலிபரப்பு மூலம் கிராமவாசிகளுக்கு உள்ளூர் வெளியூர் செய்திகளை அறிவிக்கத் துவங்கினோம். இதனால், அவர்கள் உடனுக்குடன் அவற்றை அறிந்து கொள்ள முடிந்தது என்றார் அவர். இக்கிராமத்தில் ஒவ்வொரு வீடும் கற்களால் ஆனது. கிராமத்தின் மையத்தில் பாய்ந்தோடும் சிறு ஆற்றின் இரு கரைகளிலும் சாம்பல் நிறமுடைய கல் வீடுகளும் கல் சுவர்களும் வரிசையாக காணப்படுகின்றன. வீடுகளுக்கு முன்னும் பின்னுமாக காணப்படும் 50க்கும் அதிகமான புராதன மரங்கள், இக்கிராமத்துக்கு உயிராற்றலை வழங்கியுள்ளன. கிராமத்தின் நுழைவாயிலில் முதியோர் சிலர், மரத்தடியில் அமர்ந்து, நிம்மதியாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டோம். எங்களைக் கண்டதும், கிராமப்புறப் பாடல்களை அவர்கள் பாடத் துவங்கினர். இங்கே இரண்டு மலை. ஒன்று பெரியது. ஒன்று சிறியது. இரண்டுக்கும் இடையே பாலம் வரலாம். அது உயர்வாக இருந்தால் காற்றில் அசைந்தாடும். தாழ்வாக அமைந்தால் நீரில் அமிழ்ந்திடும். என்கிறது இப்பாடல். ஓங் என்பவருக்கு, 80 வயது ஆகின்றது. பற்கள் இல்லாததால் நன்கு பாட முடியவில்லை. 70 வயது மூதாட்டி வெய், ஒரே மூச்சில் பல பாடல்களைப் பாடினார். இக்கிராமத்தில் நீண்ட ஆயுள் படைத்தோரின் எண்ணிக்கை அதிகம். இங்கு மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல், ஊஷு எனும் உடற்பயிற்சி மீதான மக்களின் விருப்பம் என்பவை இதற்கு முக்கிய காரணமாகும். ஆண், பெண், முதியோர் குழந்தை என அனைவரும் ஓய்வு நேரத்தில் இப்பயிற்சியில் ஈடுபடுவதைக் காணலாம். இக்கிராமத்தில் மூன்று பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியிருப்பதாக, கிராமத்தின் தலைவர் ஓங் தியன் கு கூறினார். ஒன்று, எமது கிராமத்தில் உள்ள 56 புராதன மரங்கள், உண்மையில் எத்தனை ஆண்டு வரலாறுடையவை என்பதை நிபுணர்கள் தீர்மானிக்க வேண்டும். இரண்டு, பெரும்பாலான கிராம வாசிகளின் வீடுகள் புதை படிவக் கற்களால் ஆனவை. இவை எக்காலத்துப் புதைபடிவக் கற்கள் என்பது பற்றி ஆராய வேண்டும். மூன்று, புயி இனக் கிராமத்தின் ஊஷு, சீனாவில் எந்தப் பிரிவைச் சேர்ந்தது என்பது நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.