• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-05-12 17:09:41    
புற்று நோயை எதிர்ப்பதில் ஆச்சரியக்கத்தக்க பயன்

cri
மக்களின் அன்றாட வாழ்க்கையில் வேதியியல் நச்சுக்கு எதிரியாக வைட்டமின் சி திகழ்கின்றது. ஒழுங்கான முறையில் நாளுக்கு 3 முறை போதிய காய்கறி, பழங்கள் ஆகியவற்றை உட்கொண்டால், வைட்டமின் சி பற்றாக்குறை உருவாகாது. இதை உத்தரவாதம் செய்யும் வகையில் உணவுச் சத்து குறையாமல் இருக்கும் வகையில் அறிவியல் முறையில் காய்கறிகளைச் சமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அது பற்றி கவனிக்க வேண்டியவைச: ஒன்று, வைட்டமின் சி எளிதாக நீரினால் உறிஞ்சப்படும். ஆகவே காய்கறிகளைச் சமைக்கும் போது பெரிய துண்டுகளாக நறுக்கக வேண்டும். தண்ணீரில் சுத்தம் செய்த பின்பு தான் நறுக்க வேண்டும். உடனடியாக பொறிக்க வேண்டும். உண்ண வேண்டும். நீண்டநேரம் ஆவியில் வேகவைப்பது, வதக்குவது போன்ற சமையல் முறை வைட்டமின் சியை நிலைநிறுத்துவதற்கு தீங்கு விளைவிக்கும். இரண்டு,. வைட்டமின் சி வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் காய்கறிச் சாறு வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளைச் சமைக்கும் போது புளிப்புச் சாற்றை உரிய முறையில் சேர்க்க வேண்டும். இதனால் சுவை அதிகரிக்கும் அதேவேளையில் வைட்டமின் சியின் பயன் காப்பாற்றப்படும். காய்கறிகளைச் சமைக்கும் போது சோடாவை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் வைட்டமின் பி, வைட்டமின் சி சீர்குலைக்கப்படும். அதிகமாக உண்ணும் திறனை அதிகரிக்கும் ஆற்றல் நிறத்திற்கு உண்டு. ஆரஞ்சு நிறம், சிவப்பு, தங்கம், மஞ்சள் முதலிய பளபளப்பான நிறத்திலான உணவுப் பொருட்கள் மனிதரின் உண்ணும் உணர்வை அதிகரிக்கின்றன. இதன் காரணமாக சில உணவு விடுதிகள் இந்நிறங்களைக் கொண்டு அழகுபடுத்துகின்றன. எடுத்துக்காட்டாக பல்வகை நிறம் கொண்ட காய்கறிகளைப் பார்க்கும் போது கூடுதலாக உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுமாம். ஆகவே, உடல் எடையைக் கட்டுப்படுத்த நிபுணர்கள் சில முன்மொழிவுகளை வெளிபட்டுள்ளனர். மீன், பச்சை மூங்கில் முளை, அவரை உணவுப் பொருள் ஆகியவை போன்ற வெள்ளை மற்றும் பச்சை நிற உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். இவற்றில் கொழும்புச்சத்து குறைவு, ஆனால் சத்து அதிகம். எடையைக் கட்டுப்படுத்தும் அதேவேளையில் உடலுக்கு தேவைப்படும் சத்து இடம் பெற்றுள்ளது. இவற்றை அழகை விரும்பும் பெண்களும், நீரிழிவு, உயர் அழுத்த நோயால் பீடிக்கப்பட்டோரும் முதலில் தெரிவு செய்கின்றனர். இது பிடிக்கும், அது பிடிக்காது என்ற மனப்பான்மையுடன் உணவுப் பொருட்களை தெரிவு செய்வது நலவாழ்வுக்கு ஆபத்தானது. அறிவியல் முறையில் உரிய விழுக்காட்டுடன், நிறத்தை வகைப்படுத்தி உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். இப்படிச் செயல்பட்டால் உடல் வலிமையுடன் உடல் நலமும் நிலைநிறுத்தப்பட முடியும். நல வாழ்வுப்பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றிய உங்கள் கருத்தையும் விருப்பத்தையும் கடிதம் மூலம் தெரிவியுங்கள்.