• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-05-17 20:29:08    
சீன மக்களின் வாழ்க்கையை உணர்வது

cri
சீன மக்களின் வாழ்க்கையை உணர்வது எனும் சுற்றுலாவை 2004ஆம் ஆண்டு சீனத் தேசிய சுற்றுலாப் பணியகம் ஏற்பாடு செய்துள்ளது. வெளிநாட்டுப் பயணிகள், ஒரு நாள் சீனர் போல் வாழ்வது. பொது மக்களின் இருப்பிடம், அவர்களின் உணவு, பண்பாட்டு வாழ்க்கை ஆகியவற்றின் மூலம், சீன மக்களின் வாழ்க்கையை அறிந்துகொள்வது என்பதும் அதன் நோக்கமாகும். சீனாவில் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவர், சுவையான சீன உணவு வகைகளைச் சுவைத்துப்பார்க்கவும், எழில் மிக்க இயற்கை காட்சித் தலங்களைக் கண்டுகளிக்கவும் துணை புரிய வேண்டும். அத்துடன், சீன மக்களின் வாழ்க்கை நிலைமையை மேலும் ஆழமாக அறிந்துகொண்டு, நேரடி அனுபவம் பெறுவதற்கும் வசதி வழங்க வேண்டும் என்று சீன தேசிய சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் லியூ க் ச்சி கூறினார். சீன மக்களின் வாழ்க்கை முறை, சீன சுற்றுலா மூலவளத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். சீனாவில் சுற்றுலா மேற்கொண்டு, மக்களின் வாழ்க்கை நிலைமையை அறிந்துகொள்வதில் வெளிநாட்டுப் பயணிகளில் 25 விழுக்காட்டினர் அக்கறை கொண்டுள்ளனர் என்றார் அவர். குறிப்பாக, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின், சீன மக்களின் வாழ்க்கை நிலை தொடர்ச்சியாக உயர்ந்துவருவதால், வெளிநாட்டுப் பயணிகள் பலர், சீன மக்களின் வீட்டுக்குச் சென்று, இன்றைய சீன மக்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை நேரடியாக உணர விரும்புகின்றனர். சீனாவில், மக்கள் பேசும் மொழி, உண்ணும் உணவு, பழக்க வழக்கங்கள் ஆகியவை வேறுபடுகின்றன. பொது மக்களின் வாழ்க்கை முறை பலவிதமானவை என்பது இதற்குக் காரணமாகும். நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, சாங்காய் மாநகரின் ஹூச்சுயெ என்னும் பாரம்பரிய இசை நாடகமாகும். இனிய சாங்காய் மொழியில் அமைந்த இந்நாடகம், ஈர்ப்புத் தன்மை வாய்ந்தது. மக்களிடையில் பரவிவந்த நாட்டுப்புறப் பாடல்கள் இதற்கு அடிப்படையாகும். சுமார் 200 ஆண்டு வரலாறுடையது. சாங்காய் மாநகரை மேலும் அறிந்துகொள்ளும் வகையில், இந்நாடகத்தைக் கண்டுகளிப்பதையும், லுன்தாங் என்னும் குறுகிய வீதியில் நடந்து, சுற்றிப் பார்ப்பதையும், பயணிகள் பலர் விரும்புகின்றனர். லுன்தாங் என்றால், குறுகிய வீதி என்று பொருள். பெய்ஜிங்கில், ஹூதொங் என்று இது அழைக்கப்படுகின்றது. இவை இரண்டும், நகரங்களின் துவக்கக் கால வடிவமாகும். சாங்காய் மாநகரிலான குறுகிய வீதிகளில், ஷகுமன் புகழ்பெற்றது. கிழக்கு சீனாவின் பாரம்பரிய மக்கள் வீடு என்ற பாணியில் உருவரையப்பட்டமை, அதன் முக்கியத் தனிச்சிறப்பியல்பாகும். அன்றி, மேலை நாடுகளின் வரிசை வீடு என்ற வடிவத்தில் கட்டியமைக்கப்பட்டது. ஆகவே, அது, சீன மற்றும் மேலை நாட்டுத் தனிச்சிறப்பியல்பின் கலவையாகும். சாங்காய் மக்கள் போல், ஒரு நாள் வாழ்வது என்ற தலைப்பிலான சுற்றுலா நடவடிக்கையை, இவ்வாண்டு சாங்காய் மாநகரம் ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம், பயணிகள், சாங்காய் மக்களின் வீட்டுக்கு வருகை தந்து, அவர்களுடைய வீட்டில் தங்கி, உரையாடலாம். அவர்களுடன் அமர்ந்து, சாங்காய் இசை நாடகத்தைக் கண்டு மகிழலாம். காய்கறிச் சந்தைக்குப் போகலாம். சீனக் காய்கறி வகைகளைச் சுயமாகச் சமைக்கலாம். யுன்தன் என்னும் சிற்றுண்டியைத் தயாரிக்கலாம். ஒரு நாள், அனுபவத்துக்குப் பின், சாங்காய் மாநகரையும் வாழ்க்கையையும் பயணிகள் விரும்பக் கூடும். சீன மக்களின் கடந்த கால மற்றும் தற்போதைய வாழ்க்கையை ஆராய வேண்டுமானால், பெய்ஜிங்கிலுள்ள ஹூதொங், சாங்காயிலுள்ள லுன்தாங் ஆகியவற்றைப் பார்வையிட வேண்டும். சீனாவில், ஒரு நகரையும், ஒரு வரலாற்றுக் காலத்தையும் பிரதிபலிக்கும் இடங்கள் பல உள்ளன. சீனாவில், மக்களின் வாழ்க்கை முறை, பலவிதமானவை. எடுத்துக்காட்டாக, வுச்சியென் மாநிலத்தின் யுன்தின் எனும் இடத்தில், மண் வீடுகள் உள்ளன. பல குடும்பங்கள் இணைந்து வாழ்கின்றன. இது, அங்குள்ள மக்களின் வாழ்க்கை வழிமுறையும் குடியிருப்புப் பண்பாடும் ஆகும். உலகப் பண்பாட்டு மரபுச் செல்வத்தில் சேர்க்கப்பட்டுள்ள அன்ஹெய் மாநிலத்தின் ஹொங்சன், சீதி ஆகிய கிராமங்களில், பல நூறு குடும்பங்கள் ஒருங்கே வாழ்கின்றன. இத்தகைய கிராமமானது, சீனாவில் காணப்படும் மிங் வமிச அல்லது சிங் வமிசக் கால கிராமமாகும். அங்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள், அங்குள்ள மக்களின் கடந்த கால வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளலாம் என்று சீனத் தேசிய சுற்றுலாத் துறை பணியகத்தின் தலைவர் லியூ க் ச்சி கூறினார். ஏப்ரல் திங்களில், தென் சீனாவின் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் மார்ச் மூன்று பாடல் விழா நடைபெறும். செப்டெம்பர் திங்களில், வட சீனாவின் தியென்சின் மாநகரில், தியென்சின் குலொ பழக்க வழக்கம் தொடர்பான விழா நடைபெறும். அப்போது, குலொ எனும் இடத்தில், நாட்டுப்புறக் கைவினைப் பொருள் விற்பனை உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைபெறும். பட்டுப்பாதைப் பயணம், யாங்சி ஆற்று மூ மலை இடுக்குப் பயணம், கிழக்கு சீனாவில் சுற்றுலா, தென் மேற்குச் சீனாவின் சிறுபான்மைத் தேசிய இன மக்களின் நடையுடை பாவனைகளை அறிந்துகொள்வதற்கான சுற்றுலா என்பவற்றில் விரும்புவதைப் பயணிகள், தேர்ந்தெடுக்கலாம். வேறுபட்ட பருவங்களில் சீனாவுக்கு வருகை தந்து சுற்றுலா மேற்கொண்டால், வேறுபட்ட அனுபவங்களைப் பெற வாய்ப்புண்டு என்று லியூ க் ச்சி மேலும் கூறினார்.