• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-05-19 20:29:14    
இணையத் தளத்தில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சியடைகின்றோம்.

cri
சீனாவின் மேற்குப் பிரதேசம் பற்றிய பொது அறிவு போட்டிக்கான சிறப்பு பரிசு தமிழ்ப் பிரிவுக்கு கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். பகளாயூர் பி.ஏ.நாச்சிமுத்து இந்தப் பரிசைப் பெறுகிறார். அவர் மே 24ம் நாள் பெய்சிங் வந்து சிறப்பு பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்வார். தமிழ்ப் பிரிவின் சார்பிலும் நேயர்களின் சார்பிலும் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். பெய்சிங், சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள யாஞ்சி மாநிலம் ஆகிய இடங்களில் அவர் சுற்றுலா மேற்கொள்வார். அப்போது நாள்தோறும் வானொலி மூலம் அவருடைய சுற்றுலா அனுபவம் ஒலிபரப்பாகும். தவிர போட்டிக்கான 1வது 2வது,3வது பரிசுகளைப் பெறுவோர்தம் பெயர்ப் பட்டியல் அடுத்துவரும் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் அறிவிப்போம். கேட்கத் தவறாதீர்கள். பொது அறிவுப் போட்டிக்கு தமிழ்ப் பிரிவுக்கு எத்தனை விடைத்தாள் கிடைத்தது என்று சிறுநாயக்கன்பட்டி கே வேலுச்சாமி கேட்கிறார். பொது அறிவுப் போட்டிக்காக மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரம் விடைத்தாள் தமிழ்ப் பிரிவுக்கு கிடைத்தது. 126, 252, 378 என்ற விழுக்காட்டில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பரிசு தமிழ்ப் பிரிவுக்கு அளிக்கப்பட்டது. நாங்கள் இந்த விழுக்காட்டில் நேயர்களுக்குப் பரிசு வழங்குவோம். வானொலி பெட்டி தவிர, ஏனைய பரிசுகள் பதிவு அஞ்சல் மூலம் நேயர்களுக்கு விரைவில் அனுப்பிவைக்கப்படும். சீன வானொலி நிலையத்தில் எத்தனை மொழிப் பிரிவுகள் காலை ஒலிபரப்பு நடத்துகின்றன ? என்று 30 பள்ளிப்படி சுப்ரமணியன், கம்பம் ஏ இருதயராஜ், சிறுநாயக்கன்பட்டி கே வேலுச்சாமி உள்பட பலர் கேட்டிருக்கின்றனர். சீன வானொலி நிலையத்தில் பல மொழிப் பிரிவுகள் காலை ஒலிபரப்பில் ஈடுபடுகின்றன. தமிழ்ப் பிரிவு போல முதலாவவது ஆசிய பகுதியில் ஹிந்தி, உருது, நேபாளம், சிங்களம் முதலிய மொழிப் பிரிவுகள் காலை ஒலிபரப்பைத் துவக்க உள்ளன. தமிழ்ப் பிரிவு அதன் 41வது ஆண்டு நிறைவு நாளான ஆகஸ்ட் திங்கள் 1ம் நாள் தொடங்கி, அதிகாரப்பூர்வமாக 1 மணி நேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப எண்ணியுள்ளது. இதற்காக பரிசோதனை முறையில் ஜுலைத் திங்களில் நிகழ்ச்சிகள் 1 மணி நேரம் ஒலிபரப்பாகும். அப்போது நாள்தோறும் செய்திகள் 15 நிமிடம், 2 செய்தித் தொகுப்பு தலா 5 நிமிடம் வீதம், 10 நிமிடம், 3 அல்லது 4 சிறப்பு நிகழ்ச்சிகள் 30 நிமிடம் என அமையக் கூடும். நேயர்களின் பங்கெடுப்பு அதிகரிக்கும். ஆகவே தங்களின் உதவி எங்களுக்கு மிகுதியும் தேவைப்படும். புதிய நிகழ்ச்சி நிரல் நேயர் அட்டை எண் கொண்டுள்ள நேயர்களுக்கு வான் அஞ்சல் மூலம் அனுப்புவோம். நேயர் அட்டை இல்லாதவர்கள் உடனடியாகத் தகவல் தாருங்கள். இனி அட்டை எண் கொண்ட நேயர்களுக்கு சீனத் தமிழ் ஒலி போன்ற இதழ் கிடைக்கும் என்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.