|
 |
(GMT+08:00)
2004-05-19 20:35:33
|
 |
யுன்செ வனப்பூங்கா
cri
சீனாவின் தென் மேற்கில் குவெய்சோ மாநிலம் அமைந்துள்ளது. அதன் தலைநகர் குவெயாங். அங்கு, யுன்செ என்னும் அரசு நிலை வனப்பூங்கா உள்ளது. சுற்றுலாப் பயணிகள் வருகை தர விரும்பும் இடம் இது.
இப்பூங்காவின் நுழைவாயிலிருந்து தொடங்கி, ஜல்லி கல்லாலான ஒற்றைப் பாதை வழியாக செல்லும் போது, பக்கத்தில் தேவதாரு உள்ளிட்ட உயரமாக வளர்ந்து நிற்கும் மரங்களைக் காணலாம். வளர்கின்றன. பறவைகளின் பாட்டொலி கேட்கலாம். சறசறவென்று ஓடும் நீர், விலங்குகள் புல் தரையில் பாய்ந்துசெல்வது ஆகியவற்றையும் காணலாம்.
பூங்காவில், நடைப்பாதை, பயணிகள் ஓய்வு எடுக்கும் கூடார மண்டபம் ஆகியவை தவிர, செயற்கைக் கட்டடம் ஏதும் இல்லை. யுன்செ வனப் பூங்காவின் பரப்பளவு, 24 சதுர கிலோமீட்டர். முன்பு, ஒரு மரப் பண்ணையாக இருந்தது. 2002ஆம் ஆண்டு இப்பூங்கா கட்டியமைக்கப்பட்டது. அப்போது, நடைப்பாதையை அமைப்பதற்காக, சில மரங்களை வெட்ட நேரிட்டது. தேவைக்கு அதிகமாக ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை. இப்பூங்காவில், வட வண்டி இல்லை. கடையில்லை. பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி இல்லை. குப்பைக் கூளப்பெட்டி கூட மரத்துண்டால் ஆனது. இதனால், பூங்காவின் அடிப்படை வசதியும் இயற்கைச் சூழலும் பின்னிப் பிணைந்துள்ளன. கன்னிக்காட்டின் நிலைமை, கூடிய அளவில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இப்பூங்காவில், கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்துக்கும் மிகவும் தாழ்வான இடத்துக்குமிடையிலான இடைவெளி 800 மீட்டராகும். பூங்காவின் வளைவு சுளிவான நடைப்பாதை, மலை நெடுகிலும் கட்டப்பட்டது. ஒரு பக்கம் செங்குத்தான மலையும் மற்றொரு பக்கம் செங்குத்துப் பாறையும் காணப்படுகின்றன.
மலைப்பாதை குறுகலானது. மிகவும் அகலமான இடத்தில் 2 பேர் ஒன்றாகு நடக்க முடியாது. மிகவும் குறுகலான இடத்தில் ஒருவர் மட்டும் சாய்ந்து நடக்க நேரிடும். மிருதுவான இடத்தில், கூரிய பாறைகள் காணப்படுவதால், பயணிகள் மேல் நோக்கிச் செல்லவோ கீழ் நோக்கிச் செல்லவோ முடியாமல், குதிக்காலால் நடக்க நேரிடுகிறது.
குண்டாக இருப்போர் கவலைப்படும் இடம் என ஒன்று, இப்பூங்காவில் உள்ளது. வழியின் நடுவில் அமைந்துள்ள மாபெரும் பாறைக்கும் இவ்வழியின் பக்கத்திலுள்ள மலைக்குமிடையில் பல பத்து சென்டி மீட்டர் தொலைவு மட்டும் உள்ளது. பயணிகள் ஒரு சாய்வாக, மலையை நெருங்கிச் செல்ல வேண்டி நேரிடும்.
பூங்காவின் நடைப்பாதைகள் ஒத்துக்காணப்படவில்லை இப்பூங்காவின் நுழைவாயிலில் உள்ள நடைப்பாதை ஜல்லி கல்லால் ஆனது. ஆனால், மலையில் ஏறினால், ஒழுங்கான தெப்பம் காணப்படுகின்றது. தொடர்ந்து சென்றால், வளைவு சுளிவான நடைப்பாதை பெரிய கற்பாதையாக மாறுகிறது. சுற்றுலாவின் போது, எழில் மிக்க வனக் காட்சியையும் கம்பீரமான மலையையும் பயணிகள் கண்டுகளிக்கலாம். தவிர, தெப்பம், கற்பாதை ஆகியவை, பயணிகளின் காலைத் தொடுவது போன்ற உணர்வு ஏற்படலாம்.
ஆண்டுதோறும் ஏப்ரல் மே திங்களில், மலையில் பல்வகை மலர்கள் அழகாக காட்சி அளிக்கின்றன. செந்நிற மலர்கள் நெருப்பு போலவும் வெண்ணிற மலர் உறைபனி போலவும், இளம் செந்நிற மலர்கள் அந்திப்பொழுது சூரிய ஒளி போலவும் காணப்படுகின்றன.
இங்குள்ள மலர்களும் மலர்ச்செடிகளின் இலைகளும் மிக மிக அழகானவை என்று வழிகாட்டி கொங்சியெமெய் கூறினார்.
இப்பூங்காவில், அழிவின் விளிம்பில் உள்ள வேங்கர் எனும் அரிய தாவரம் வளர்கின்றது. இது, அரசு நிலையிலான பாதுகாப்பு தாவரமாகும். பறக்கும் பறவை போன்ற வடிவத்திலான அதன் மலர், வெண்ணிறமுடையது. டைனோசர் காலத்தில் தோன்றியதன் காரணமாக, இத்தாவரம் மதிப்பு மிக்கது என்று கொங்சியெமெய் கூறினார்.
|
|
|