
நமது உடலுக்கு வெளிச்சம் மிக மிகத் தேவைப்படுகின்றது. அது சூரிய வெளிச்சமோ, அல்லது வேறு விளக்கு வெளிச்சமோ, எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. குளிர்காலத்தில், இத்தகைய வெளிச்சம் பெரிதும் தேவைப்படுகின்றது என்பது ஊரறிந்த உண்மை. குளிர்காலத்தில் அறையிலேயே இருந்துகொண்டு, சூரிய வெளிச்சம் படாமல், சிறிய மேசை விளக்கொளியில் பல மணி இருப்போர்- பருவகால உடல்நலக் குறைவுக்கு ஆளாக நேரிடும் என்று மருத்துவர் எச்சரிக்கின்றனர். SEASONAL AFFECTIVE DISORDER என்று அவர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர். ஒளி-குறிப்பாக சூரிய ஒளி-பல சாதகமான விளைவுகளைக் கொண்டுள்ளது என்கிறார் பேராசிரியர் ஸுலே. இவர், ஜெர்மனியின் ரெஜென்ஸ்பர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர். நமது உடம்பின் தோல் வெப்பமாக இருப்பதற்கும், ஆரோக்கிய உணர்வு ஏற்படுவதற்கும் அது காரணமாக அமைகின்றது. கடற்பரப்பில், சூரிய ஒளியில் குளியல் செய்வதும் இது போன்ற சாதகமான விளைவைத் தருகிறது. ஆனால், நமது கண்களால் உறிஞ்சப்படும் ஒளி, நமது மூளையைப் பாதிக்கிறது என மருத்துவ நிபுணர் எச்சரிக்கின்றனர். இது, நமது மகிழ்ச்சியைப் பாதிக்கலாம், உடல் சோர்வுக்கும் காரணமாகலாம்.
1 2
|