• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-05-28 21:44:50    
சிறுபான்மைத் தேசிய இனப் பிரதிநிதிகளின் குரல்

cri

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத்திறப்புப் பணி சீனாவில் துவங்கியது முதல், சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்களில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு சிறுபான்மைத் தேசிய இன மக்களின் வாழ்க்கை நிலையும் முன் கண்டிராத அளவில் உயர்ந்துள்ளது. சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்களின் வேகமான வளர்ச்சிக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்க வேண்டுமென்று, அரசு பணி அறிக்கையில் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்.

பெரும்பாலான சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்கள் நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளன. இங்கு செழிப்பான இயற்கை வளங்கள் இருந்த போதிலும், அடிப்படை நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. மேற்குப் பகுதியில் பெரும் வளர்ச்சியை நடைமுறைப்படுத்தியமை, சிறுபான்மைத் தேசிய இனப் பிரதேசங்களுக்கு, வளர்ச்சிக்கான வாய்ப்பினை வழங்கியுள்ளது.

து இன மக்கள் முக்கியமாக சீனாவின் மேற்குப் பகுதியின் சின் ஹாய் மாநிலத்தில் குழுமி வாழ்கின்றனர். இப்பிரதேசமோ ஒப்பீட்டளவில் வறியது. பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளது. ஆனால், மேற்குப் பகுதியின் பெரும் வளர்ச்சிக்கான நெடுநோக்குத் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது முதல், இங்கு பெருமளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. து இன மக்களின் வாழ்க்கை நிலையும் முன்பை விட மிகுதியும் உயர்ந்துள்ளது. நபர்வாரி வருமானமும் மொத்த தேசிய பொருளாதார மதிப்பும் சிங் காய் மாநிலத்தில் ஒப்பீட்டளவில் விரைவாக அதிகரித்துள்ளன. து இன மக்கள் சில ஆண்டுக்கால முயற்சி மூலம், இதர தேசிய இன மக்கள் போல், முன்னணியில் நிற்க முடியும் என்று நம்புகிறோம் என்று, து இனப் பிரதிநிதி கூறினார்.

1  2  3