• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-17 22:33:16    
15வது கருத்தரங்கில் கலந்து கொள்ள இந்திய பயணம்

cri

 

விமான நிலையத்தின் நுழைவாசலில் வரவேற்பு

முனுகப்பட்டு பி.கண்ணன் சேகர், திமிரி வீர ராமதாஸ், ஆரணி பொன் தங்கவேலன் ஆகியோர் அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் 15வது கருத்தரங்கை நடத்த முன்வந்தனர். இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வகையில் நவெம்பர் திங்கள் 28ம் நாள் இரவு கலையரசி கலைமகள் இருவரும் சிங்கப்பூர் வழியாக இரவு 11 மணியளவில் சென்னை சென்றடைந்தோம். எஸ் செல்வம், பல்லவி கே பரமசிவன், எஸ் எம். இரவிச்சந்திரன், பொன் தங்கவேலன், வீர ராமதாஸ், பி, கண்ணன் சேகர், பி. ஏ. நாச்சிமுத்து, எஸ் பாண்டியராசன், கே செந்தில் முதலியோர் விமான நிலையத்தில் எங்களை வரவேற்றனர்.

சென்னையில் விருந்தோம்பல்

நவெம்பர் 29ம் நாள். காலைச் சிற்றுண்டி உண்ட பின் மெரினா கடற்கரையைப் பார்வையிட்டோம். நண்பகல் முன்னாள் அமைச்சர் முனைவர் மு. தமிழ்க்குடிமகன் அவர்களின் இல்லத்துக்குச் சென்று சந்தித்துப் பேசினோம். அவர் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்துகொண்டு அறுசுவை உணவை உண்டோம். பின் தமிழ்ப் பிரிவில் பணிபுரிகின்ற நிபுணர் ந.கடிகாசலம் அவர்களின் நங்கநல்லூர் இல்லத்துக்குச் சென்று திருமதி கலைச்செல்வியைப் பார்த்தோம். மாலைப் பொழுதில் ஆரணிக்குப் புறப்பட்டோம். வழியில் ஸ்ரீ பெரும் புதூரில் அமைந்துள்ள முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜிவ்காந்தியின் நினைவகத்துக்குச் சென்று அஞசலி செலுத்தினோம். 1991ம் ஆண்டில் தேர்தல் நிரச்சாரத்துக்குத் தமிழகம் வந்து பொதுக் கூட்டத்தில் ராஜிவ் காந்தி கலந்து கொண்ட போது, மனித வெடி குண்டுக்கு அவர் பலியானார். அவர் உயிர் தியாகம் செய்த இடத்திலே, அவருக்கான நினைவகம் கட்டியமைக்கப்பட்டது. "அமைதியான சூழ்நிலையில் ஓய்வு எடுங்கள்" என்று நாங்கள் வழிபாடு செய்தோம். ஆழ்ந்த மதிப்புணர்வுடன் நினைவகத்தை விட்டு ஆரணிக்குத் தொடர்ந்து சென்றோம். இரவு 11:30 மணியளவில் ஆரணி சென்றடைந்தோம். பொன் தங்கவேலன் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் தங்கினோம்.