• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-05-31 10:54:46    
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி

cri

டென்னிஸ்

உலக அணி கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில், சிலி, 2க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து, கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், பிரபல விளையாட்டு வீரர் சிலர் மண்ணைக் கவ்வியிருக்கின்றனர். அமெரிக்காவின் ஆண்ட்ரெ அகாஸி, முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு, வெளியேறினார். உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், மூன்றாவது சுற்றில் தாக்குப்பிடிக்காமல், பிரெசிலின் குவெர்டனிடம் தோல்வி கண்டார். ஆஸ்திரேலியாவின் மார்ச் பிலிப்போசிஸ், அமெரிக்காவின் ஆன்டி ராடிக் ஆகியோரும் பிரெஞ்சு ஓபன் களத்திலிருந்து புறந்தள்ளப்பட்டனர்.

பிரான்சின் சண்டாரோ, 6-4,6-3, 6-7, 3-6,16-14, என்ற புள்ளி கணக்கில் சக நாட்டவரான ஆர்னாட் கிளெமன்டைத் தோற்கடித்தார். இந்த ஆட்டம், 6 மணி 33 நிமிடம் நீடித்தது. டென்னிஸ் வரலாற்றில் மிக நீண்ட நேரம் நீடித்த ஆட்டம் இதுவே. இதுவல்லவா ஆட்டம் என்று மூக்கின் மேல் விரல் வைத்துப் பிரமித்துப் போயினர் பார்வையாளர்.