• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-04 10:22:09    
சீனாவின் முதலாவது பார்முலா-1 வீரர்

cri

உலகில் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், ரக்பி, மேசைப் பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, பூப்பந்து என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றுடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காரோட்டும் போட்டி ஒன்று பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றது. அது தான் FORMULA ONE CAR RACE புகழ்பெற்ற நிறுவனங்களின் ஆதரவுடன் வீரர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

ஜெர்மனியின் மைக்கேல் ஷுமேக்கர், இன்று இந்தப் போட்டியின் தலைசிறந்த நாயகனாக ஈடு இணையற்ற வீரராக விளங்குகின்றார். மேசைப்பந்து, பூப்பந்து ஆகியவற்றில் கொடி கட்டிப் பறக்கும் சீனாவின் பார்வை, இப்போது இந்தப் போட்டியின் பக்கம் திரும்பியுள்ளது. காரணம் 2004 செப்டம்பர் 26இல், ஷாங்காயில் சீன கிராண்ட் பிரி கார் பந்தயம் துவங்கவுள்ளது. இதற்கு அச்சாரம் வழங்கியிருக்கும் சீன வீரர் துங் ஹோ பின் ஆவார்.

சீனாவின் முதலாவது FORMULA ஒன்று வீரராக மாறத் துடிக்கும் இந்த இளைஞர், நெதர்லாந்தில் பிறந்து வளர்ந்தவர். வயது 21.

டிசம்பர் 11 வியாழனன்று ஸ்பெயினில் F1 போட்டியின் தேர்வில் துங் கலந்து கொண்டார். இவ்வாண்டின் BME ஆசிய தொடரில் வெற்றி பெற்றதன் விளைவாக இந்த வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது.

1  2  3