கால்பந்து
2006 உலக கோப்பை தென் அமெரிக்கத் தேர்வாட்டத்தில், பிரேசில் 3 கோல் போட்டு, ஆர்ஜென்டினாவைத் தோற்கடித்தது. இந்த 3 கோல்களையும், பெனால்டி என்ற நிலையில், போட்டவர் ரொனால்டோ. இதன் மூலம், பிரெசில் தற்போது 12 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. ஆர்ஜென்டினா இரண்டாம் இடத்தில் உள்ளது. சிலி மூன்றாமிடத்திலும், பராகுவே நான்காமிடத்திலும் இருக்கின்றன.
இங்கிலாந்துக்கும் ஜப்பானுக்குமிடையே நடைபெற்ற நட்புபூர்வ ஆட்டம், எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டன.
ஜெர்மனிக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றிபெற்றது.
3-1 என்ற கோல் கணக்கில், பல்கேரியாவை வென்றது செக் குடியரசு.
சர்வதேசக் கால்பந்தாட்டத்தில் கென்யா பங்கெடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கென்ய கால்பந்து சம்மேளனத்தை மீண்டும் துவக்க, கென்ய அரசு மறுத்து விட்ட காரணத்தால், சர்வதேசக் கால்பந்து சம்மேளனம் இவ்வாறு தடை விதிக்க நேரிட்டது.
1 2 3
|