• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-09 11:45:31    
செஞ்சிக் கோட்டையில் சுற்றுலா

cri

டிசெம்பர் 1 அதிகாலையில் ஆரணியை விட்டுப் புதுவைக்குப் புறப்பட்டோம். வழியில் செஞ்சிக் கோட்டையைச் சுற்றிப் பார்த்தோம். செஞ்சி மன்னர் ராஜாதேசிங்கு பற்றிய அரிய வரலாற்றுக் கதையை செல்வம் எடுத்துக் கூறினார். அருமையான கதை. மன்னரின் துணிவு, காதலின் மீதான விசுவாசம், நாட்டுப் பற்று நண்பருடன் பழகும் முறை முதலியவை பற்றி எங்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினார். கோட்டையில் சுற்றுலா மேற்கொண்டது. எங்களைப் பொறுத்தவரை அருமையான அனுபவமாகும். இரும்புக் கம்பி, மரம் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் சுண்ணாம்பு மட்டும் பயன்படுத்தி 4 மாடி உயரமான தானியக் கிடங்கைக் கட்டிய பண்டைத் தமிழர்களின் திறமை எங்களை வியக்கவைத்தது குறிப்படத்தக்கது.

 புதுவையில் வரவேற்பு

 

மதியம் 1 மணியளவில் புதுவை சென்றடைந்தோம். புதுவை மாநில நேயர் மன்றத் தலைவர் என் பாலகுமார், செயலாளர் ஜி ராஜகோபால் ஆகியோர் தலைமையில் நேயர்கள் எங்களை வரவேற்றனர். மன்றம் பற்றி அறிமுகப்படுத்தினர். பாண்டிசேரி கடற்கரை மற்றும் புகழ்பெற்ற அரவிந்தர், ஆசிரமம் ஆகியவற்றைப் பார்வையிட்டோம்.

இரவில் புதுவை மாநில தமிழியல் சங்கம் ஏற்பாடு செய்த செய்தியாளர் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டோம். சீனா மீது ஆர்வம் கொண்ட புதுவை மாநில பிரமுகர்கள் கேட்ட வினாக்களுக்கு பொறுமையுடனும் விவரமாகவும் விடையளித்தோம். வெளிநாட்டு வர்த்தகத் துறை பற்றிய சீன அரசின் கொள்கை, சோஷலிச நாட்டை நிர்மாணிப்பது தொடர்பான சீன அரசின் கொள்கை, சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு, முதலியவை தொடர்பாக அவர்கள் கேள்வி கேட்டனர். புதுவை ஹிந்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிலைய செய்தியாளர்கள் எங்களைப் பேட்டி கண்டனர். ஓர் இரவு மட்டுமே புதுவையில் தங்கியிருந்த போதிலும் சீனா பற்றி அறிந்துகொள்வதில் இந்திய நண்பர்களுக்கு உதவியது கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அன்றிரவு, என், பாலகுமார் அவர்களின் இல்லத்தில் உணவு உண்டோம்.