 வெவ்வேறான வயதுடையோருக்கு ஏற்புடைய உடல் பயிற்சி பற்றி இபோது பார்ப்போம்.
அமெரிக்க உடல் பயிற்சி நிபுணர் ஒருவர் தன் அனுபவத்தைத் தொகுத்து மனிதரின் வாழ்நாளுக்குப் பொருந்திய உடற்பயிற்சித் திட்டத்தை வகுத்துள்ளார். 20 வயது முதல் 60 வயது வரையான மக்களுக்கு இத்திட்டம் உகந்தது. அவருடைய திட்டத்தை இப்போது பார்ப்போம்.

முதலில் 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞருக்கான உடற்பயிற்சி
ஓட்டம், குத்துச் சண்டை போன்றவற்றை அவர்கள் தேர்வு செய்து பயிற்சி மேற்கொள்ளலாம். இவற்றில் ஈடுபடுவதன் மூலம் உடலில் பெருமளவிலான வெப்பமாற்றலை நுகர்வுப்படுத்தலாம். உடம்பிலுள்ள தசை வலிமையடையும். பொறுமையாற்றல் கை கண் இசைவுத் திறமை ஆகியவை வலுப்படும். மன ரீதியில் புறத்தே இருந்து வரும் மன அழுத்தம் நீங்கிவிடும்.
இனி 30 வயதானவருக்கு ஏற்ற உடல்பயிற்சி பற்றி பார்க்கலாம்.
கற்பாறை ஏற்றம், சறுக்கல் பலகை, பனிச் சறுக்கல், வூசு ஆகியவை அவர்களுக்கு ஏற்றவை. இதன் மூலம் உடலின் எடை குறையும். தசை குறிப்பாக கால் பகுதிகளிலுள்ள தசையின் வளைந்துகொடுக்கும் திறமை அதிகரிக்கும். உயிராற்றல் பொறுமையாற்றல் ஆகியவையும் அதிகரிக்கும். சமமான இசைவான, கூர்மையான உணர்வு சீராக்கப்படும். 40 வயதானவர்கள் தொலைதூரம் நடத்தல், மாடி ஏறுதல், டென்னிஸ் விளையாட்டு ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம். இதன் மூலம் உடலின் தசை தளர்வடையும். மாடி ஏறுதல் சுறுசுறுப்பாக வேலைபார்ப்போருக்கு நல்ல உடற்பயிற்சியாகும். டென்னிஸ் ஆட்டம் உடல் முழுவதற்கும் பயன் விளைவிக்கும்.
இந்த விளையாட்டுப் பயிற்சி பசுமையான காற்று போல மனிதருக்குப் புத்துணர்ச்சி தரும். மன அழுத்தத்தை நீக்கிட உதவும். பயிற்சியில் ஈடுபட்ட பின் உறுதிப்படுத்தும் திறமையும் வேகமும் அதிகரிக்கும்.

நீச்சல், படகு ஓட்டம், கோல்ப் விளையாட்டு ஆகியவை 50 வயதானவருக்குத் தகுந்த பயிற்சியாகும். நீரில் பாய்ந்து பயிற்சியில் ஈடுபடுவது கடினமானதல்ல. கர்ப்பிணி, ஈரத்தால் நோய்வாய்ப்பட்டவர், முதியோர் ஆகியோர் உடற்பயிற்சி மேற்கொண்டால் எலும்புகள் வலுவடையும். கோல்ப் பயிற்சியில் அடிக்கடி ஈடுபட்டால் இதய நோயாளி குணமடைவதற்கு வாய்ப்புண்டு.
......இசை........
நடப்பது, நடனம் ஆடுவது, யூக்கா பயிற்சி ஆகியவை 60 வயதுக்கு மேற்பட்டோருக்குத் துணை புரியும். நடப்பதன் மூலம் கால்கள் வலுவடையும். நடனம் ஆடுவதன் மூலம் ஒருவகை மென்மை உணர்வு மனிதருக்குக் கிடைக்கும்.
|