சீன திபெத் பண்பாட்டு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி சங்கம் 21ந் நாள் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டது.
சீனத் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் துணைத் தலைவர் லியு யான் துங் உரையாற்றுகையில், கடந்த 50 ஆண்டுகளில், திபெத்திலான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை முன்னேற்றுவிப்பதுடன், திபெத்தின் தலைசிறந்த பாரம்பரிய பண்பாட்டுக்கான பாதுகாப்பையும் திபெத் இனத்தின் புதிய பண்பாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றுவிக்க சீன அரசு பாடுபட்டுள்ளது; இதில் குறிப்பிடத்தக்க சாதனையும் பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.
திபெத் பண்பாட்டின் வரலாறு, நிகழ்வு நிலை, வளர்ச்சிப் போக்கு ஆகியவை பற்றி களஆய்வு செய்வது, அரசுக்குத் திட்டவட்டமான பாதுகாப்பு ஆலோசனையை வழங்குவது, திபெத் பண்பாடு பற்றிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்துவது ஆகியவை இச் சங்கத்தின் நோக்கமாகும்.
|