• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-21 08:56:48    
இடம்பெயர்ந்த லியெ வ் கிராம மக்கள்

 


cri

இறுதியில், லியெ வ் கிராம மக்கள் வேறு இடத்துக்குக் குடியேறியுள்ளனர். தற்போது, லியெ வ் கிராமத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு பகுதிக்குச் செல்லும் பாதை போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. கிராம மக்கள் வசிக்கும் 2 மாடிக் கட்டடங்கள், பாதையின் ஒரு பக்கத்தில் வரிசையாக நிற்கின்றன. தவிர, குடிநீர் பிரச்சினை, மின்சாரப் பிரச்சினை ஆகியவையும் தீர்க்கப்பட்டுள்ளன. 50 விழுக்காட்டுக்கும் அதிகமான குடும்பங்கள் தொலைபேசி வசதி பெற்றுள்ளன.

இவ்வாறு இடம்பெயர்ந்த 61 வயது ஹூ ஜியெ சாங்கின் வீடு, முன்பு, யாங்சி ஆற்றின் அருகிலுள்ள லியெ வ் கிராமத்தில் இருந்தது. அதன் பரப்பளவு அதிகம். இதனால், அரசு அதிக நட்ட ஈடு தொகை வழங்கியதாகவும், தற்போதைய வீட்டின் முதலாவது மாடியில் கடை நடத்துவதாகவும், ஹூ ஜியெ சாங் கூறினார். குடும்பத்தின் வருமானம் முக்கியமாக வேளாண் துறையில் ஈடுபடுவதன் மூலம் கிடைத்தது. தவிர, பதனீட்டுத்தொழில் மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபடுவதன் மூலமும் பணம் சம்பாதிக்கலாம் என்று அவருடைய மகன் ஹூ யின் மிங் கூறினார்.

யாங்சி ஆற்று மூ மலை இடுக்கு நீர் தேக்கப் பிரதேசத்தில் அமைந்துள்ள லியெ வ் கிராமம், வளம் பெற்ற கிராமம் ஆகும். தற்போது, இக்கிராமத்தில், ஆண்டுதோறும் நபர்வாரி வருமானம் 2000 யுவானைத் தாண்டியுள்ளது. யாங்சி ஆற்று மூ மலை இடுக்கு நீர்தேக்கப் பிரதேசத்தில் நீர் சேமிப்புக் காரணமாக, இக்கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30 ஹெக்டர் நிலம் நீரில் மூழ்கிவிட்டது. கூடுதலான பயன் பெறுவதற்காக, கிராமவாசிகள், லிச்சி, கடுகு போன்ற தொழில் பயிர்களைப் பயிரிடத் துவங்கினர். இக்கிராமத்தில் 4 தொழிற்சாலைகள் உள்ளன. கிராமவாசிகள் பலர், வேளாண் துறையில் ஈடுபடுகின்றனர். தவிர, ஓய்வு நேரத்தில் இத்தொழிற்சாலைகளிலும் பணி மேற்கொள்கின்றனர் என்று கிராம ஊழியர் சாங் ஜி ருன் கூறினார்.

1  2  3